செவ்வாய், 17 ஏப்ரல், 2018

முஸ்லிம்கள் பற்றி, சிங்களவர்களிடம் விதைக்கப்பட்டும் அச்சங்கள்

-ரவூப் ஸெய்ன்

1915 இல் இடம்­பெற்ற கம்­பளைக் கல­வ­ரத்­துக்­கான அடித்­த­ளத்தை இட்­டவர் சிங்­கள மஹா போதி சபையை ஸ்தாபித்த அந­கா­ரிக தர்­ம­பால. கல­வ­ரத்­திற்கு ஐம்­பது ஆண்­டு­க­ளுக்கு முன்­பி­ருந்தே அதற்­கான பிர­சா­ரங்­களை அவர் வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுத்தார்.  இதற்­கெ­னவே அவ­ரது மது ஒழிப்பு இயக்கம் பயன்­ப­டுத்­தப்­பட்­டது. தர்­ம­பா­லவின் பிரச்­சாரம் இரண்டு பகு­தி­களில் முனைப்புப் பெற்­றி­ருந்­தது. ஒன்று, ஐரோப்­பி­யர்கள் மற்றும் இந்­தியத் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரா­னது. இரண்­டா­வது, இலங்­கை­ முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­னது.

“சிங்­கள இனம் ஓர் இணை­யற்ற இனம். அவர்­க­ளது உடலில் அடிமை இரத்தம் ஓட­வில்லை. அவ்­வி­னத்தை அழிவுக் காரர்­க­ளாலோ பிற மதத்­த­வர்­க­ளான தமி­ழர்­க­ளாலோ அடி­மை­யாக்க முடி­ய­வில்லை. கடந்த மூன்று நூற்­றாண்­டு­க­ளாக இந்­நாட்டை அழித்து பௌத்த ஆல­யங்­களை நாசம் செய்து நூல­கங்­களைத் தீக்­கி­ரை­யாக்கி வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த எம்­மி­னத்தைப் பூண்­டோடு ஒழிக்க முயல்­ப­வர்கள் ஐரோப்­பி­யர்கள். மாமி­சத்தைப் புசிக்க வேண்­டு­மென சபிக்­கப்­பட்ட கிறிஸ்­த­வர்கள் தாழ்ந்­த­வர்கள். சிங்­க­ள­வர்­கள்தான் சிங்­கள நாட்டை ஆள வேண்டும்.” (பார்க்க. தர்­ம­பால லிபி) எனக் குர­லெ­ழுப்­பிய தர்­ம­பால மறு­புறம் முஸ்­லிம்­க­ளையும் முனைப்­பாக இலக்கு வைத்தார்.

“அந்­நி­ய­ரான முஹம்­ம­தியர் ஷைலொக்­கிய வழி­மு­றை­களால் யூதர்­களைப் போன்று செல்­வந்­தர்­க­ளாக மாறினர். 2358 வரு­டங்­க­ளாக அந்­நிய முற்­று­கை­யி­லி­ருந்து நாட்டைப் பாது­காப்­ப­தற்­காக இரத்­தத்தை ஆறு போல் ஓட்டி தமது மூதா­தை­யர்­களை இழந்த மண்ணின் மைந்­தர்­க­ளான சிங்­க­ள­வர்கள் பிரித்­தா­னி­யர்­களின் கண்­களில் நாடோ­டி­க­ளா­கவே தென்­ப­டு­கின்­றனர். தென்­னிந்­திய முஹம்­ம­தி­யர்கள் இலங்­கைக்கு வந்து வியா­பா­ரத்தில் எந்த அனு­ப­வமும் அற்ற கிரா­ம­வா­சி­களைச் சுரண்­டு­கின்­றார்கள். இதன் விளைவு முஹம்­ம­தியர் முன்­னே­று­கின்­றார்கள். மண்ணின் மைந்­தர்கள் பின்­ன­டை­கி­றார்கள்.” (பார்க்க. தர்­ம­பால லிபி)

இத்­த­கைய பிரச்­சா­ரங்­களால் வெறி­யூட்­டப்­பட்­டி­ருந்த சிங்­கள இளை­ஞர்கள் 1915 கல­வ­ரத்தில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான தமது பகை­யு­ணர்வைக் கொட்டித் தீர்த்­தனர். கல­வ­ரத்­துக்­கான உட­னடிக் காரணம் வேறு இருப்­பினும் அதற்­கான சித்­தாந்த அடித்­த­ளத்தை இத்­த­கைய இனத் தேசி­ய­வா­தி­களின் பிர­சா­ரங்­களே ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தன. அக்­கா­லத்தில் சுதேச வர்த்­த­கத்­திலும் சர்­வ­தேச வணி­கத்­திலும் முஸ்­லிம்கள் பெற்­றி­ருந்த செல்­வாக்கைத் தகர்ப்­ப­தற்கு இத்­த­கைய இனக்­க­ல­வ­ரங்கள் தூண்­டி­வி­டப்­பட்­டன.
தற்­போ­தைய குறிப்­பாக 2012 இற்குப் பின்னர் ஏற்­பட்ட இனப்­ப­தட்­டத்­திற்கு ஒற்றைக் கார­ணத்தைத் தேட முடி­யாது. கடந்த ஆறு ஆண்­டு­க­ளாக முஸ்­லிம்கள் குறித்து சிங்­கள மக்கள் மத்­தியில் பல்­வேறு வகை­யான அச்­சங்­களும் ஐயங்­களும் விதைக்­கப்­பட்டு வரு­கின்­றன. அவை வெறும் கற்­பி­தங்கள் என்­ப­தோடு திட்­ட­மிட்டுப் பரப்­பப்­ப­டு­கின்­றன என்­ப­தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இத்­த­கைய அச்­சங்­களை சிங்­கள சிவில் சமூ­கத்­திற்கு அவை வெறும் கற்­பி­தங்கள் என்­ப­தனை விளக்­கு­வ­தற்கு முஸ்­லிம்கள் முன்­வ­ர­வில்லை. இது துர­திஷ்­ட­மா­னது. முஸ்லிம் தலை­மை­களின் பல­வீ­னமே இதற்­கான கார­ண­மாகும். மறு­புறம் முஸ்­லிம்கள் குறித்து இன­வா­திகள் பரப்பும் போலிக் குற்­றச்­சாட்­டுக்­க­ளையும் அச்­சங்­க­ளையும் சிங்­கள மக்கள் நம்­பு­வ­தற்கு ஏற்ற சூழல் மாறி­வரும் முஸ்லிம் சமூ­கத்தில் உள்­ளதா என்­பதும் ஊன்றிக் கவ­னிக்க வேண்­டிய விட­ய­மா­கின்­றது.

முதலில் நாம் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக சிங்­க­ள­வர்­களின் உணர்­வ­லை­களை எழுப்ப முயலும் இன­வா­திகள் தொடர்ச்­சி­யாக முன்­வைத்து வரும் போலிக்­குற்றச் சாட்­டுக்கள் எவை என்­பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவற்றை ஒரு பரி­மாற்று வச­திக்­காக பின்­வ­ரு­மாறு அடை­யா­ளப்­ப­டுத்­தலாம்.

1.நாட்டில் முஸ்லிம் சனத்­தொகை அதி­க­ரித்து வரு­கின்­றது. இதனால் 2100 ஆம் ஆண்டில் இலங்கை முஸ்லிம் பெரும்­பான்மை நாடாக மாறி­விடும்.
2.சிறு­பான்­மை­யாக உள்ள முஸ்­லிம்­க­ளுக்கு பெருந்­தொ­கை­யான பள்­ளி­வா­சல்கள் நிர்­மா­ணிக்­கப்­ப­டு­கின்­றன. அவை மிக ஆடம்­ப­ர­மா­கவும் பெரும் செல­விலும் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றன.

3.முஸ்­லிம்கள் இன­வாதம் சார்ந்த அர­சி­யலை முன்­னெ­டுக்­கின்­றனர்.

4.ஒப்­பீட்டு ரீதியில் இலங்கை முஸ்­லிம்கள் நாட்­டுப்­பற்று அற்­ற­வர்­க­ளா­கவும் சுய­ந­ல­மி­க­ளா­கவும் வாழ்­கின்­றனர்.

5.பௌத்த கலா­சார சின்­னங்­க­ளையும் தொல்­பொருள் சான்­று­க­ளையும் அழித்து வரு­கின்­றனர்.

6.சிங்­க­ள­வர்­களின் இனப்­பெ­ருக்­கத்தைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்குச் சூழ்ச்சி செய்­கின்­றனர்.

7.ஹலால் சான்­றிதழ் மூலம் சிங்­கள பௌத்­தர்­களின் பணத்தைச் சுரண்­டு­கின்­றனர்.

8.பாரம்­ப­ரிய இஸ்­லாத்­தி­லி­ருந்து விலகி தீவிர வாத வஹ்­ஹா­பிய இஸ்­லாத்­திற்கு மாறு­கின்­றனர். இது ஓர் அடிப்­ப­டை­வா­த­மாகும்.

9.திட்­ட­மிட்ட வகையில் சிங்­க­ள­வர்­களை இஸ்லாம் மதத்­திற்கு மாற்­று­கின்­றனர்.

10.பள்­ளி­வா­சல்கள் மற்றும் அறபு மத்­ர­ஸாக்­களில் தீவி­ர­வா­தத்தைப் போதிக்­கின்­றனர்.

11.நாட்டின் வர்த்­த­கத்தில் முஸ்­லிம்­களே ஆதிக்கம் செலுத்­து­கின்­றனர்.
இவ்­வா­றான குற்­றச்­சாட்­டுக்­களை 1990 களி­லி­ருந்து தொடர்ச்­சி­யாக முன்­வைத்து வரு­கின்­றனர். இவற்றை முன்­னெ­டுக்கும் இன­வாத இயக்­கங்­களின் பெயர்­களும் முகங்­களும் மாறி­வந்­துள்ள போதும் பிர­சா­ரத்தின் உள்­ள­டக்கம் ஒன்­றா­கவே இருக்­கின்­றது. முஸ்லிம் காங்­கி­ரஸின் ஸ்தாபகத் தலைவர் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரபுடன் தொலைக்­காட்சி விவா­தத்தில் ஈடு­பட்ட கங்­கொ­ட­வில சோம தேரர் தான் முதல் குற்­றச்­சாட்டைக் காட்­ட­மாக முன்­வைத்­தவர். அவர் 2050 ஆம் ஆண்­டிற்குள் இலங்கை பெரும்­பான்மை முஸ்லிம் நாடாக மாறி­விடும் என்று விஷப்­பி­ர­சாரம் செய்து வந்தார். இதனை அறிவு பூர்­வ­மா­கவும் புள்­ளி­வி­பர ரீதி­யிலும் பின்னர் நோக்­குவோம்.

கங்­கொ­ட­வில எனும் தனிப்­பட்ட மத­குரு ஒரு­வ­ரோடு பர­வ­லாக்­கப்­பட்ட விஷப் பிரசாரம் பின்னர் பல்­வேறு சிங்­கள, பௌத்த அமைப்­புக்­களால் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. 1990 களில் 40 சிங்­கள பௌத்த இயக்­கங்கள் ஒன்­று­சேர்ந்து உரு­வாக்­கிய சிங்­கள ஆணைக்­குழு இதே­வகைப் பிர­சா­ரத்தை முன்­னெ­டுத்­தது. 1997 இல் உரு­வாக்­கப்­பட்ட ஆணைக்­குழு முன்­பாக பேரா­தெ­னிய, கொழும்பு, களனி, ஜய­வ­ர்­த­ன­புர போன்ற பல்­க­லைக்­க­ழ­கங்­களைச் சேர்ந்த சிங்­களக் கல்­வி­மான்­களும் பௌத்த பிக்­கு­களும் கூட முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராகச் சாட்­சி­ய­ம­ளித்­தனர்.

“சிங்­கள பூமி புத்­ரய” கட்சி இதன் அர­சியல் பரி­மா­ண­மாக செயற்­படத் தொடங்­கி­யது. அதன் தலைவர் ஹரிச்­சந்­திர விஜ­ய­துங்க “இலங்­கையின் பெரும்­பா­லான வர்த்­தகம் முஸ்­லிம்­க­ளி­டமே உள்­ளது. இலங்கையில் இஸ்­லா­மிய அர­சாங்­க­மொன்றை நிறு­வு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. மன்­னா­ரி­லி­ருந்து இடம்­பெ­யர்ந்த அக­திகள் திஹா­ரியில் காணி­களை வாங்­கி­யுள்­ளனர். புத்­த­ளத்தில் முஸ்­லிம்­களின் குடி­யேற்றம் அதி­க­ரித்து வரு­கின்­றது. அக்­கு­றணை நக­ரி­னூ­டாக சிங்­க­ள­வர்­களின் பூத­வு­டல்­களைக் கொண்­டு­செல்­வது கூட அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தில்லை. கிரிந்­தி­வலை, நிட்­டம்­புவ நக­ரங்­களில் முஸ்­லிம்­களின் கடைகள் அதி­க­ரித்து வரு­கின்­றன. 1976 இல் மீரி­கமை நகரில் ஒரே­யொரு முஸ்லிம் கடையே இருந்­தது. தற்­போது 56 கடைகள் இருக்­கின்­றன.” எனத் தெரி­வித்­தி­ருந்தார். (திவ­யின 07.04.1997)

சிங்­கள ஆணைக்­கு­ழுவின் முத­லா­வது சுற்­ற­றிக்கை 1997 செப்­டம்பர் 17 இல் வெளி­யி­டப்­பட்­டது. கடந்த 30 ஆண்­டு­கால இன­வாத வர­லாற்றில் இவ்­வா­ணைக்­குழு ஒரு முக்­கிய நிறு­வ­ன­மாகும். சிங்­கள சமூ­கத்­தி­லுள்ள எல்லாத் தரப்­பி­ன­ரையும் இணைத்த ஒரு வலைப்­பின்­னலை அது ஏற்­ப­டுத்­தி­யது. சிங்­கள ஆணைக்­கு­ழுவைத் தொடர்ந்து ‘சிங்­கள வீர­வி­தான’ இயக்கம் உரு­வாக்­கப்­பட்­டது. அதன் இன்­னொரு கிளை இயக்­க­மாக பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான அமைப்பு முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராகக் கள­மி­றங்­கி­யது.
2000 களில் இனவா­தத்தை மூல­த­ன­மாகக் கொண்டு அர­சியல் இயக்­கங்கள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. கிட்­டிய எதிர்­கா­லத்தில் அவை அர­சியல் கட்­சி­க­ளாக மாறி ஆட்­சியில் பங்­கா­ளர்­க­ளாக தம்மைத் தக­வ­மைத்துக் கொண்­டன. அதில் ஜாதிக ஹெல உறு­மய முக்­கி­ய­மான இயக்­க­மாகும். இதன் சித்­தாந்த அடிப்­ப­டை­வா­தி­யாக இருப்­பவர் இன்­றைய அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க என்­பதை நாம் மறந்­து­விடக் கூடாது. அவ்­வி­யக்­கத்தின் முக்­கிய மத­கு­ரு­வான ஓமல்பே சோபிக தேரர் கடந்த வாரமும் முஸ்­லிம்­க­ளுக்கு அதிக சலுகை வழங்­கப்­ப­டு­வ­தா­கவும் கூறி­யி­ருந்தார்.

2013 இல் தலை­யெ­டுத்த ‘பொது­பல சேனா’ இன்­றைய இனப்­ப­தட்­டத்தின் அடி­நா­த­மாக உள்­ளது.

இதன் மடியில் வளர்ந்த சிங்­கள இயக்­கங்­க­ளான சிங்­கள ராவய, ஹெல சிங்­கள ஹிரு, ராவண பலய, சிங்க லே, மஹ சொஹொன் பல­காய போன்­றன முஸ்லிம் சிறு­பான்­மையை இலக்­கு­வைத்துச் செயல்­ப­டு­கின்­றன. வெளிப்­ப­டை­யாகப் பெயர்­களில் இவை வேறு­பட்­டாலும் சித்­தாந்த உள்­ள­டக்­கத்­திலும் முஸ்லிம் விரோதப் பிர­சா­ரத்­திலும் ஒன்­று­பட்டு செயல்­ப­டு­கின்­றன. இவை சிங்­க­ள­வர்­க­ளுக்கு மத்­தியில் மேற்­கொண்­டு­வரும் விஷப்­பி­ர­சாரம் குறித்தும் முஸ்­லிம்கள் குறித்த போலிக் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பிலும் முஸ்லிம் தலை­மை­களும், சமூக நிறு­வ­னங்­களும் சிங்­கள சிவில் சமூ­கத்­திற்கு விளக்­க­ம­ளிக்க முன்­வர வேண்டும். இத்­த­கைய இன­வா­தி­க­ளுடன் இவை தொடர்பில் விவாதம் செய்ய வேண்­டி­ய­தில்லை. ஆனால், பெரும்­பான்மை மக்­க­ளுக்கு முஸ்­லிம்கள் குறித்து நிலவும் ஐயங்­களைத் தெளி­வு­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது.

நாட்டில் முஸ்லிம் சனத்­தொகை அதி­க­ரித்து வரு­கின்­றது. இதனால் 2100 ஆம் ஆண்டில் இலங்கை முஸ்லிம் பெரும்­பான்மை நாடாக மாறி­விடும். இது சிங்­க­ள­வர்கள் மத்­தியில் முஸ்­லிம்கள் பற்­றிய அச்­சத்தை விதைத்து வரும் இன­வாத சக்­தி­களின் விஷப் பிர­சா­ரங்­களில் முதன்மையானது. ஏற்கனவே நாம் குறிப்பிட்டது போன்று இந்தப் போலிக் குற்றச்சாட்டை முதலில் பிரச்சாரம் செய்தவர் கங்கொடவில சோம தேரர். பின்வந்த சில பௌத்த பிக்குகளும் இனத்தேசியவாத இயக்கங்களும் இப்பிரசாரத்தை முன்னெடுத்து வந்தனர்.

விளைவாக முஸ்லிம் பெண்கள் அரசாங்க வைத்தியசாலைகளில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்படுவதற்கு அச்சம் தெரிவித்து வந்தனர்.இயற்கையான சுகப்பிரசவங்களைக் கூடத் திட்டமிட்டு அறுவைச்சிகிச்சை மேற்கொண்டு முஸ்லிம்களின் மகப்பேற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இத்தகைய இயக்கங்களில் சம்பந்தப்பட்ட வைத்தியர்கள் ஈடுபட்டனர். கடந்த காலங்களில் இடம்பெற்ற இந்நடவடிக்கை தற்போது குறைவடைந்துள்ளது. எனினும், சில இடங்களில் இன்னும் தொடர்வதாக முஸ்லிம்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் முஸ்லிம்கள் குறித்துப் பரப்பப்படும் இப்போலிக் குற்றச்சாட்டு மற்றும் அச்சம் எந்தளவு அறிவுபூர்வமானது என்பதை புள்ளிவிபர ரீதியாகப் பரிசீலிப்பது கட்டாயமாகும். ஏனெனில், சமீபகாலங்களில் கூட திவயின, ஐலன்ட், அத போன்ற பத்திரிகைகள் இதே கருத்தைப் பெரும் கட்டுரைகளாக வெளியிட்டன. எனவே, இது குறித்து அரசாங்கத்தின் தொகைமதிப்பீட்டுப் புள்ளிவிபரங்களை ஆராய்வது முக்கியமானது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக