திங்கள், 30 ஏப்ரல், 2018

மே தினக் கூட்டங்களுக்கு பொலிஸாரின் தடை இல்லை! பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

மே முத­லாம் திகதி தொழி­லா­ளர் தினக் கொண்­டாட்­டங்­க­ளில் ஈடு­ப­டு­வது சட்­ட­ரீ­தி­யா­கத் தடை­செய்­யப்­ப­டாத நிலை­யில், அன்று நடை­பெ­றும்கூட்­டங்­க­ளுக்கு பொலி­ஸா­ரால் எந்­த­வித இடை­யூ­று­க­ளும் ஏற்­ப­டுத்­தப்­ப­ட ­மாட்­டாது.
இவ்­வாறு பொலிஸ் ஊட­கப்­பேச்­சா­ளர் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் ருவன் குண­சே­கர தெரி­வித்­தார்.

எனி­னும், மே மாதம் முத­லாம் திகதி வெசாக் தின நிகழ்­வு­க­ளுக்­குப் பாதிப்பு ஏற்­ப­டுத்­தும் வகை­யில், வீதி­க­ளில் போக்­கு­வ­ரத்­துத் தடை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் செயற்­பட்­டால், அதற்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.
பௌத்­தர்­க­ளின் புனித நாளும் மே தின­மும் ஒரே நாளில் வரு­வ­தால் மே தின நிகழ்­வு­களை எதிர்­வ­ரும் 7ஆம் திக­திக்கு மாற்­று­மாறு அர­சி­டம் மகா­நா­யக்க தேரர்­கள் விடுத்த கோரிக்கை ஏற்­றுக் கொள்­ளப்­பட்­டது.
அத­னால் 7ஆம் திகதி மே தினக் கொண்­டாட்­டங்­களை நடத்­து­வது என்று அரச தரப்­பி­னர் முடி­வெ­டுத்­த­னர். எனி­னும், சில கட்­சி­கள் மே தின நிகழ்­வு­களை மே முத­லாம் திக­தியே நடத்­த­வுள்­ள­தா­கத் தெரி­வித்­துள்­ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக