வெள்ளி, 20 ஏப்ரல், 2018

ஆசிபாவுக்கு நீதிவேண்டி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்!

இந்தியாவில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு  கொலை செய்யப்பட்ட சிறுமி ஆசிபாவுக்கு நீதி வேண்டியும் கண்டித்தும் இன்று(20)  கொழும்பில் உள்ள இந்திய உயா் ஸ்தானிகா் ஆலயத்திற்கு முன்பாக  அமைதியான ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.  

இவ் ஆர்ப்பாட்டத்தினை ஜக்கிய சமாதான முன்னணியின் தலைவா் மொஹம்மட் மிப்லால் ஒழுங்கு செய்திருந்தார். 

காலிமுகத்திடலிலிருந்து அமைதியாக வந்த ஆர்ப்பாட்டக்காரா்கள்,  சிறுமி ஆசிபாவின் கொலையை, பாலியல் வன்முறைகளை நாங்கள் வன்மையாக கண்டிப்பதாகவும் இக் குற்றவாளிகளுக்கு துாக்குத் தண்டனை வழங்கும்படியும்  இந்தியாவில் இதுபோன்ற வன்முறைகளை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படியும் இந்தியப் பிரதமா் மோடியைக் கேட்டுக் கொள்வதாகவும்  கூறினாா்.   

அத்துடன் உரிய மனுவை பாரமெடுக்க முடியாது எனவும் உயா் ஸ்தானிகா் முன் வாயலில் கூறப்பட்டது. 

( அஷ்ரப் ஏ சமத்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக