ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

"ஆசிபா கொடூரத்தின் பின்னால்..."

விஜயபாஸ்கர் விஜய்யின் ஆய்வு

ஆசிபா கொடூரத்தின் பின்னால், மிக கேவலமான முக்கியமான மதஅரசியல் ஒன்று இருக்கிறது.

சமீபத்தில் வங்காளத்தில் முஸ்லிம் தலைவர் மகன் கொல்லப்பட்டதும் அவர் “யாராவது இதற்கு பதில் கலவரம் செய்தால் நான் ஊரில் இருக்க மாட்டேன்” என்பதை நாம் நினைத்து பார்க்க வேண்டும்.

ஒரு முஸ்லிம் தலைவரின் மகனை கொன்றால் பெரிய கலவரம் வரும் அதையொட்டி இந்திய முஸ்லிம்கள் ஏதாவது தவறு செய்வார்கள் அதைக் காட்டி காட்டியே இந்திய வட இந்திய இந்துக்களை ஒர் அணியில் திரட்டலாம் என்பது இந்து அடிப்படைவாதிகளின் எதிர்பார்ப்பு.

இதை இந்திய முஸ்லிம்கள் நன்கு புரிந்தே வைத்திருக்கிறார்கள்.

இதன் பிரதிபலிப்பே அந்த முஸ்லிம் தலைவரின் மன்னித்தல் போக்கு. மதச்சார்பின்மை பற்றிய காந்திய வழியை நன்கு உள்வாங்கிய ஒருவரால்தான் அப்படி பெருந்தன்மையாக மன்னிக்க முடியும்.

மகனை கொன்றாலும் கொதிக்காதவர்களை எப்படி கொதிக்க வைப்பது.

அவர்கள் திட்டம் இதுதான்.

ஒரு சின்னப்பிள்ளையை கொல்.

அந்த சின்னப்பிள்ளை ஆணாக இருக்க வேண்டுமா? (அடிப்படைவாதிகள் திட்டம்)

பெண்ணாக இருக்க வேண்டுமா? பெண்ணாக தேர்ந்தெடு.

எத்தனை வயதுக்குள் இருக்க வேண்டும்? (அடிப்படைவாதிகள் திட்டம்)

பத்து வயதுக்குள் தேர்ந்தெடு. அப்போதுதான் அக்குழந்தை செல்லமாக அம்மா அப்பா உறவினர்களுடன் பழகி அனைவர் மனதிலும் இடம் பிடித்திருப்பாள்.

எப்படி கொல்ல வேண்டும். வெறுமே கழுத்தை அறுத்தால் போதுமா? (அடிப்படைவாதிகள் திட்டம்)
இல்லை அப்படி என்றால் மக்களுக்கு கொதிப்பு வராது. பெண் குழந்தை. பாலியல் வல்லுறவு கொள்ளு. அதுதான் எதிர்சாரியினரை வெறி ஏத்தும்.

சரி பாலியல் வல்லுறவு கொண்டு கொன்றால் மட்டும் போதுமா? (அடிப்படைவாதிகள் திட்டம்)

இல்லை பட்டினி போடு.

ஒருநாள் பட்டினி போட்டு பாலியல் வல்லுறவு கொண்டு கொன்றுவிடவா? (அடிப்படைவாதிகள் திட்டம் )

இல்லை எட்டுநாள் போடு. அது மக்களுக்கு தெரிய வேண்டும். அப்போதுதான் கொதிப்பு வரும்.

இடம்? (அடிப்படைவாதிகள் திட்டம்)

கோவிலில் செய். அப்போதுதான் அது உச்சபட்சமாக இருக்கும். அவர்களுக்கு வெறி ஏறும்.

மாபெரும் கேவலமான இந்து அடிப்படைவாதிகளின் திட்டத்தின் Victim தான் ஆசிபா என்னும் இளம்குருத்து.

முற்றிலும் மனிதநேயமே இல்லாத கேட்டாலே கொதிக்கும்படியான ஒரு உளச்சிக்கலுக்கும் உளவியல் நெருக்கடிக்கு இந்திய முஸ்லிம்களை இட்டுச்செல்ல வேண்டும்.

தலித்களை கொன்று குவித்து அவர்களுக்கு வெறி ஏற்ற வேண்டும்.

இவர்களின் கொடூரமான இந்த action க்கு இந்திய முஸ்லிம்களும் தலித்களும் பதிலுக்கு கொடூரமாக React பண்ண வேண்டும்.

இதைப் படிக்கும் போது உங்களுக்கு சந்தேகம் வரலாம். 

ஆசிபாவின் கொலைக்கு நாம அனைவருமே எதிர்ப்பு தெரிவிக்கிறோமே. இந்திய முஸ்லிம்கள் மட்டுமா தெரிவிக்கின்றனர். மனுசனுக்கு மனசன் என்ற அடிப்படையில் அனைத்து மக்களும் ஆசிபாவுக்காக கண்ணீர் வடிக்கிறோமே என்று நினைக்கலாம்.
நடுநிலையாளர்கள் போல ”பிரச்சனை மறப்பாளர்கள்” வேறு யாருமில்லை என்பது இந்து அடிப்படைவாதிகளுக்கு நன்கு தெரியும்.

கொடுர செயல் அனுபவித்த விளைவுகளால் ஏற்படும் வெறி முஸ்லிம்கள் + நடுநிலையாளர்கள் இருவருக்கும் ஏறும் என்பது இந்து அடிப்படைவாதிகளுக்கு தெரியும்.

அதே சமயம் அந்த வெறி முஸ்லிம்கள், தலித்கள் மனதில் தங்கி இருக்கும். நடுநிலையாளர்கள் மனதில் இருந்து ஒரிரு நாளில் வடிந்துவிடும்.

வெறி கொண்டு முஸ்லிம்களும் தலித்களும் மிகக்கொடூரமாக ரியாக்ட் செய்யும் போது அங்கே நடுநிலையாளர்கள் அது action ஆன reaction என்று பார்க்காமல் அதைக் கொண்டு அதிகமாக கொந்தளிப்போம் என்று இந்து அடிப்படைவாதிகளுக்கு தெரியும்.

ஒரு இந்து கொலை செய்யும் போது கொதிக்கும் நடுநிலையாளன். அதே மாதிரிதான் முஸ்லிம் கொலை செய்யும் போதும் கொதிப்பானா. இல்லை.

அங்கேதான் இந்திய மக்கள் மனதில் இருக்கும் Hidden Hindu மனது ஆழ்மனதில் பலவேலை புரியும்.

அவன் நடுநிலையாளன் ஆனாலும் முஸ்லிம் செய்யும் ஏதோ சில வேலைகள் அவனை அதிகம் பயமுறுத்துகின்றன. இந்த பயத்தை பயன்படுத்தி இந்திய இந்துக்களை ஒன்று திரட்டி வெல்ல வேண்டும் என்பதுதான் இந்து அடிப்படைவாதிகளின் தீய எண்ணம் ஆகும்.

இன்னொருமுறை எளிமையாக தொகுக்கிறேன் இதை.

  1. இந்திய சிறுபான்மையினர் மீது மனிதநேயமற்ற கொடூரமான தாக்குதல் என்ற ஆசிட்டை ஊற்று.
  2. 20% இந்திய சிறுபான்மையினர் +60% நடுநிலை இந்துக்கள் கொதிப்பார்கள்.
  3. நடுநிலை இந்துக்களிடம் இருக்கும் ”மறைமுக இந்து மனது” கொதிப்பை மறக்கும்வரை காத்திரு. சின்ன சின்னதாக இந்திய சிறுபான்மையினரை சீண்டிக்கொண்டே இரு.
  4. குறிப்பிட்டசமயத்தில் இந்திய சிறுபான்மையினர் கொதித்து ரியாக்ட் செய்வான். எதாவது கொடூரத்தை பதிலுக்கு செய்வான்.
  5. அதைப் பிடித்துக் கொள். அதை பெரிதாக்கு. ஒட்டுமொத்த இந்திய தேசமே ஆபத்தில் இருக்கிறது என்று பூதாகாரப்படுத்து.
  6. இப்போது இந்த 60% நடுநிலை இந்துக்களில் முக்கால்வாசி பேர் இந்து அடிப்படைவாதத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரிக ஆரம்பித்து விடுவார்கள்.
  7. இப்போது 70 % இந்துக்கள் (20% அடிப்படைவாதிகள் + 50 ) இந்து அடிப்படைவாத கட்சியை ஆதரித்து ஒட்டுப் போடுவார்கள்.
  8. கைக்கு அதிகாரம் வந்ததும் மறுபடி அதிகாரத்தை வைத்து இந்தியாவை இந்து அடிப்படைவாத நாடாக கட்டமைக்கவேண்டும்.

இதுதான் இந்து அடிப்படைவாதிகளின் திட்டம்.

ஆகவே நடுநிலை என்பது இங்கே இந்திய சிறுபான்மையினரை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதுதான் என்பதை சமூகநீதி பதிவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அட்லீஸ்ட் இந்த 2019 தேர்தல் வரைக்குமாவது உங்கள் லட்சியவாத நடுநிலையை ஒதுக்கி வைத்துவிட்டு இந்திய சிறுபான்மை ஆதரவு பக்கம் சாய்ந்து விடுங்கள்..

நடுவில் நிற்கிறேன் என்று சிறுபான்மை மதங்களை கிண்டல் செய்யாதீர்கள்.

நான் பகுத்தறிவுவாதி என்று தனிமனித கருத்துத் தூய்மையை நிருபிக்க நட்ட நடுவில் நின்று சிறுபான்மை மதத்தை கிண்டல் செய்து வைக்காதீர்கள்.

எளிய தர்க்க நடுநிலைமை எடுக்காதீர்கள்.

ஆசிபா சம்பவம் போல சம்பவங்களை பெரிய தர்க்கமாக புரிந்து காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், விடுதலைச்சிறுத்தை போன்ற கட்சிகள் இறங்கி பிரச்சாரம் செய்ய வேண்டும்.

நினைத்துப் பாருங்கள் இந்தத்திட்டம் எதுவும் புரியாமல் ஆசிபா அப்பாவியாய் நடந்து வந்து கொண்டிருக்கும் போது
அவளை பிடித்துக் கொண்டு போகும்
அந்த விநாடி
அந்த விநாடி
அந்த விநாடி.

அவள் கண்களில் தெரிந்த குழப்பம், பதற்றம், பயம், மூச்சுத்திணறல்.. நினைத்துப் பாருங்கள்.

அதன் பின்னாலே இருக்கும் திட்டமிட்ட மத அடிப்படைவாத அரசியலை நினைத்துப் பாருங்கள்.

அந்த மதவாத அரசியலை எதிர்க்க நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள். நினைத்துப் பாருங்கள்.

நடுநிலைமையில் இருந்து நொட்டவா போகிறீர்கள்.
நினைத்துப் பாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக