செவ்வாய், 10 ஏப்ரல், 2018

முஸ்லிம் பெண் உறுப்பினர் தமிழில் உரையாற்றியதால் ஒரு மணிநேரம் ஸ்தம்பித்த காலி மாநகர சபை!

காலி மாநகர சபையில் இன்று 10 திகதி நடைபெற்ற முதலாவது கூட்ட அமர்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் உரையாற்றியதால் சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பட்டன .
காலி மாநகர சபையின் கன்னியமர்வு இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.30 அளவில் மாநகர மேயர் பிரியந்த சஹபந்து தலைமையில் மாநகர சபை கட்டிடத் தொகுதியில் ஆரம்பமாகியது. முதலாவது அமர்வின்
மங்கள நிகழ்வில் அனைத்தும் தனிச் சிங்கள மொழியில் இடம்பெற்றதால் அதனை தன்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை என்று தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரான எம்.எம்.எவ். ரிஹானா, தமிழ் மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது என்று கோரிக்கை விடுத்துள்ளார் .
இதன் காரணமாக சபையில் பெரும் குழப்பநிலை ஏற்பட்டதோடு அமைதியின்மையும் தோன்றியது. மாநகர சபை உறுப்பினர் ரிஹானாவின் கோரிக்கையை நியாயப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாநகர சபை உறுப்பினரான பி.எல்.தேசப்பிரியவுடன் ஜேவிபி மூன்று உறுப்பினர்களும் மற்றும் சுயற்சை குழு உறுப்பினர்கள் இருவர் உற்பட கூட்டாக , உடனடியாக மொழிபெயர்ப்பு வசதியை ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள் .‘
இக் கோரிக்கையை முன்வைத்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக தெரிவு செய்யப்பட்டு பொதுஜன முன்னியை ஆதரித்த முஸ்லிம் உறுப்பினர்கள் ஒரு சிலர் இடையூறு விளைவித்ததாகவும் தெரியவருகிறது .
குழப்பத்திற்கு மத்தியில் இவரது உரை காரணமாக சபையில் பெரும் களேபரம் ஏற்பட்டது. பெரும் அமைதியின்மைக்கு மத்தியில் கருத்து மோதல்களும் சபையில் எழுந்த காரணத்தினால் சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக மாநகர மேயர் அறிவித்தார். எனினும் ஒரு மணித்தியாலங்கள் கடந்த பிறகே சபை மீண்டும் கூடியதாக முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் தெரிவித்தார்
மேலும் , இம்முறை காலி மாநகர சபையில் மொத்தம் 35 உறுப்பினர்கள் இருக்கின்றனர் , அதில் பத்து முஸ்லிம் உறுப்பினர்கள் அடங்குவர் ஐக்கிய தேசியக் கட்சியில் எட்டு முஸ்லிம்கள் தெரிவாகியதில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான திருமதி ரிஹான மகரூப் தவிர்ந்த ஏனைய எழு பேர்களும் பொதுஜன பெரமுனவைக்கே ஆதரவு வழங்கினர் , இதனாலேயே ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அதிகாரம் பொதுஜன பெரமுனைக்கு பழி போனது , அங்கு சுதந்திர கட்சி சார்பில் ஒருவரும் பொதுஜன பெரமுனை சார்பில் ஒருவருமாக முஸ்லிம் உறுப்பினர்கள் இருவர் உள்ளனர் .
1867 ஆம் ஆண்டில் ஸ்தபிக்கப்பட்டுள்ள காலி மாநகர சபையில் 150 வருடத்துக்கு பின்பு (10) இன்றைய தினமே முதல் முதலாவதாக மாநகர சபா மணடபத்தில் தமிழ் மொழியில் மாநகர சபை உறுப்பினர் ரிஹான மஹரூப் உரையயாற்றியதோடு இதனால் பெரும்பான்மை உறுப்பினர்களுக்கு மொழிபெயர்ப்பு வழங்க வேண்டிய அவசியமும் , தனி சிங்கள மொழியில் இயங்கி வந்த சபை நடவடிக்கைகள் தமிழ் மொழியிலும் மொழிபெயர்பிக்கப்பட வேண்டிய தேவைப்பாடும் ஏற்பட்டதாக தெரியவருகிறது .
சுமார் 27000 முஸ்லிம் வாக்காளர்கள் வசிக்கும் காலி நான்கடவைத் தொகுதி பிரதேச செயலக வட்டாரம் அரசாங்கத்தாலே இரு மொழி (தமிழ்,சிங்களம் ) அமுலாக்கல் பிரதேசமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ள பிரதேசம் என்பதும் இங்கு குறிப்பிடதக்கது.
(ரிஹ்மி ஹக்கீம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக