வியாழன், 19 ஏப்ரல், 2018

போகிற போக்கில் கவிதைத் தொகுப்பு அறிமுக விழா

2017 கொடகே கையெழுத்துப் பிரதி போட்டியில் பரிசு பெற்ற  கொடகே வெளியீடான  பூகொடையூர் அஸ்மா பேகத்தின் போகிற போக்கில்  கவிதை தொகுப்புபின் அறிமுக விழா எதிர்வரும் 28.04.2018 சனிக்கிழமை பி.ப.3.30. பூகொட குமாரிமுல்லை மு.ம.வித்தியாலய. பிரதான மண்டபத்தில் நடைபெறும்

இலக்கியப் புரவலர் ஹாஸிம் அவர்களின் முன்னிலையில் இவ்விழாவுக்குப் பூகொட குமாரிமுல்லை மு.ம.வித்தியாலய அதிபர் M.K,R.மொஹமட் அவர்கள் தலைமை வகிப்பார்நூலின்
முதற்பிரதியினை இலக்கியப் புரவலர் ஹாஸிம் ஒமர் பெற்றுக்கொள்வார்.

வரவேற்புரையை M.N.F..கு.றுகையா நிகழ்த்தகவி வாழ்த்தினை மேமன்கவி வழங்குவார்கருத்துரைகளைச்  சிங்கள எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான ஹேமசந்திர பத்திரன,  லேக்ஹவுஸ் தமிழ் பிரசுரங்களின் ஆலோசகர் அல்ஹாஜ் M.A.M..நிலாம், K.M.F. நுஸ்ரத் ஆகியோர் வழங்குவார்கள்.
ஏற்புரையை நூலாசிரியை பூகொடையூர்  அஸ்மா பேகம் நிகழ்த்துவார்.

நிகழ்ச்சிகளைக் கிண்ணியா அமீர் அலி தொகுத்தளிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக