வெள்ளி, 9 மார்ச், 2018

பிரச்சினைகளைப் பேசித் தீர்க்கவும்! - கனடா

மோதல்களுக்கு காரணமான பிரச்சினைகளைப் பேசித் தீர்க்குமாறு, கனேடிய அயலுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்ரிடியா பீரீலன்ட் தெரிவித்துள்ளார்.
கண்டிக் கலவரம் தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
இலங்­கை­யில் தற்­போது நிலவி வரும் சூழ்­நிலை மிக­வும் கவ­லை­ய­ளிக்­
கும் வகை­யில் உள்­ளது. இத­னால் மோத­லில் ஈடு­ப­டு­ப­வர்­கள் அமைதி காக்க வேண்­டும். பேச்சு ஊடா­கத் தீர்வு கண்டு இதற்கு ஒரு சுமூ­க­மான முடிவை காணவேண்­டும்.
இந்­தச் சம்­ப­வங்­கள் குறித்துத் தவ­றான தக­வல்­கள் பரப்­பப்படுவ­தால், அதற்கு முடிவு கட்­டும் வகை­யில் இலங்கை அரசு எடுத்­துள்ள நட­வ­டிக்­கையை வர­வேற்­கின்­றேன் – – என்­றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக