திங்கள், 12 மார்ச், 2018

அரபு நாடுகள் இலங்கைக்கு எதிராகப் பிரேரணை கொண்டுவரவுள்ளது!

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் அரபு நாடுகள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளதாக கல்ப் டைம்ஸ் தெரிவித்துள்ளது. 
தங்கள் நாடுகளின் தூதுவர்கள் மூலம் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ள அந்நாடுகள், இலங்கை பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிநேரும் எனவும் குறிப்பிட்டுள்ளது. 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் 37 ஆவது அமர்வில் இது தொடர்பில் கருத்துரைக்கப்படவுள்ளதாகவும், அங்கு அனைத்து
அரபு நாடுகளும் ஒன்றிணைந்து இலங்கைக்கு எதிராக பிரேரணை முன்வைக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பிரேரணைகளுக்கு எதிராக அளித்த வாக்குகள் தொடர்பில் மீண்டும் கருத்திற்கொள்ளப்படவுள்ளதாக அப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் அரபு நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையிலான வணிகத் தொடர்புகளில் தளர்வுநிலை ஏற்படாலம் எனவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக