வெள்ளி, 9 மார்ச், 2018

விடுவிக்கப்பட்ட கோமகன் மீண்டும் கைது!

தமிழ் அரசியல் கைதியாகத் தடுத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்த முன்னாள் யாழ்.மாநகர சபை உறுப்பினர் முருகையா கோமகன் இன்று கட்டுநாயக்கா வானூர்தி நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கு பயணம் செய்வதற்காக வானூர்தி நிலையத்துக்குச் சென்ற போது, அவருக்கு பயணத் தடை
விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி வானூர்தி நிலையப் பொலிஸார் நண்பகல் 12 மணியளவில் அவரைக் கைது செய்தனர்.
பயங்கரவாதத் தடுப்பு பொலிஸாரால் கடந்த 2010.08.23 ஆம் திகதி கைது செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் தென்னிலங்கைச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கோமகன் கடந்த 2016.02.29 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
அதன் பின்னர் ஆலய வழிபாட்டுக்காக கடந்த 2016 ஆம் ஆண்டு ஜுலை மாதம் இந்தியாவுக்குச் செல்ல முற்பட்ட போது அவர் கட்டுநாயக்கா வானூர்தி நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக