வெள்ளி, 9 மார்ச், 2018

மின்னஞ்சலைக் கட்டுப்படுத்தவும் தயாராகிறது அரசு!

இலங்கைக்குள் இணையத்தளங்கள் மற்றும் மின்னஞ்சல்களைக் கட்டுப்படுத்துவதற்கு சீன முறைமையைப் பயன்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற, உயர்மட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கலந்துகொண்ட நிகழ்விலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா  அதிபர் பூஜித்த ஜயசுந்தர அங்கு கருத்துத் தெரிவிக்கையில்,
“இலங்கையில் சமூக வலைத்தளங்களைக் கட்டுப்பாட்டுக் கொண்டுவருவதன் மூலம் பெரும்பாலும் இனவாத பிரச்சினைகள் ஏற்படாதிருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக