ஞாயிறு, 11 மார்ச், 2018

பௌத்தர்கள் முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்ற கூற்றை வாபஸ் பெற வேண்டும்! - ஓமல்பே சோபித்த தேரர்

அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்ல தான் கூறிய கூற்றை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், பௌத்தர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் ஓமல்பே சோபித்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் அவர் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவ் அறிவித்தலாவது -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திகனயில் ஏற்படுத்தப்பட்ட நாசகார செயலுடன் தொடர்புபடுத்தி, பாராளுமன்றத்தில் அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்ல பேசும்போது, அந்நிகழ்வு தொடர்பில் முஸ்லிம்களிடம் பௌத்தர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
உடன்எழுந்த கோபத்தினால் சிலரினால் ஏற்படுத்தப்பட்ட அப் பயங்கரவாதச் செயற்பாடுகள் பௌத்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்டதொன்றல்ல. அதுதொடர்பில் முழு பௌத்தர்களையும் குற்றம் சுமத்துவது உசிதமானதல்ல. அந்த ஈனச் செயல் தொடர்பில் இலங்கை வாழ் பௌத்தர்களைக் குற்றம் சுமத்துவது பெருங்குற்றமாகும். இது இந்நாட்டவர்களினதும் வெளிநாட்டினரினதும் கவனத்தைத் திசை  திருப்பும் செயலாகும். 
இதுதொடர்பில் வெளிநாட்டுத் தலையீடு வெகுசீக்கிரம் இலங்கையைச்சூழ்ந்துகொள்ளவியலும். அதனால் கிரிஎல்ல இலங்கை வாழ் அனைத்து பௌத்தர்களிடமும் இதுதொடர்பில் மன்னிப்புக் கேட்கவேண்டும் என இலங்கை ராமங்ஞ நிகாயவின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் கேட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக