வெள்ளி, 9 மார்ச், 2018

பதற்றத்திற்கு அரசியல் வெடிப்பே காரணம்! - அநுரகுமார

நாட்­டில் ஏற்­பட்­டுள்ள இன­வா­தப் பதற்ற நிலைக்கு அர­சி­யலில் ஏற்­பட்­டுள்ள வெடிப்­பும் கார­ணம். இவ்­வாறு மல்­வத்­துப் பிரி­வின் மகா­நா­யக்க தேரர் தெரி­வித்­த­தாக, மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யின் தலை­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அனுர குமா­ர­தி­ச­நா­யக்க தெரி­வித்­தார்.
தலதா மாளி­கைக்கு நேற்று முன்­தி­னம் சென்ற அவர், மகா­நா­யக்க தேரர்­க­ளி­டம் ஆசீர்­வா­தம் பெற்­றார். அதன் பின்­னர், ஊட­கங்­க­ளுக்குக் கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
நாட்­டில் இனங்­க­ளுக்­கி­டை­யில் நல்­லி­ணக்­
கம் பாதிக்­கப்­ப­டு­மாக இருந்­தால், நாடு பெரிய அழிவைச் சந்­திப்­பதைத் தடுக்க முடி­யாது என­வும் மகா­நா­யக்க தேரர் தன்­னி­டம் தெரி­வித்­த­ாா் என அவர் மேலும் குறிப் ­பிட்­டுள்­ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக