புதன், 14 மார்ச், 2018

தற்போதைய அரசாங்கத்தையும் மாற்றும் காலம் நெருங்கிவிட்டது! அத்துரலியே ரத்தன தேரர்

மகிந்த அரசாங்கத்தை வெளியேற்றியதைப் போலவே, தற்போதைய அரசாங்கத்தையும் வெளியேற்ற வேண்டிய காலம் வந்துவிட்டதாக, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

பதுளையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

தற்போது இந்த அரசாங்கத்திடம் நல்ல விடயங்கள் என்று எதுவும் இல்லை. நாட்டை பிரிக்கும் வகையிலான அரசியல் யாப்பு யோசனை ஒன்றை கொண்டு வந்து, இனமுறுகலை ஏற்படுத்தியுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு விற்பனை செய்து, நாட்டின் சொத்தை அழித்தது. திறைசேரியை சூறையாடியுள்ளது. நிதி அமைச்சருக்கு பதவி விலக நேர்ந்துள்ளது.

இவ்வாறு மக்கள் மீது அக்கறை இல்லாமல் செயற்படும் இந்த அரசாங்கத்தை வெளியேற்றி, புதிய அரசாங்கத்தை உருவாக்க வேண்டிய காலம் வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக