வியாழன், 15 மார்ச், 2018

கந்தளாயில் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்றுக்கு இனந்தெரியாதோரால் தீ வைப்பு!

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக லொறியொன்றுக்கு இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 இச்சம்பவம் இன்று(15) அதிகாலை கந்தளாய் பேராறு பகுதியில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


 இத் தீ விபத்துச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது: புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கந்தளாய் பிரதேசத்தில் ஒப்பந்த அடிப்படையில் வீடுகளுக்கு கூரைகள், சிவிலிங் வேலைகள் போன்றவற்றினை தங்கி நின்றி மாதக்கணக்கில் மேற்கொண்டு வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக