சனி, 10 மார்ச், 2018

பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு அக்கரைப்பற்றில் 33 இலட்சம் ரூபா சேகரிப்பு

அக்கரைப்பற்றில் இயக்கங்கள் அனைத்தையும் இணைத்து, அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற, பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான நிதி சேகரிப்பில்,

3,364,220.00 ரூபா பணமும், ஒரு தொகை உலர் உணவுப் பொருட்களும் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதில் வெளிநாட்டுப் பணம் உள்ளடக்கப்படவில்லை எனத்
தெரிகின்றது. நிதி உதவி மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய அனைவருக்கும் சம்மேளனம் நன்றியைத் தெரிவித்துள்ளது.

நிதி சேகரிக்கும் பணி நாளையும் தொடரப்படவுள்ளதாதக் தெரிகிறது.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக