வெள்ளி, 9 மார்ச், 2018

மன்னாரில் கடும் வறட்சி! 21754 பேர் பாதிப்பு

நாட்­டில் ஏற்­பட்­டுள்ள வறட்சி கார­ண­மாக வடக்­கில் மன்­னார் மாவட்­டம் தொடர்ச்­சி­யா­கப் பாதிக்­கப்­பட்டு வரு­கி­றது என்று தெரி­விக்­கப்­பட்­டது. மன்­னார் மாவட்­டம் முழு­வ­து­மாக 21,754 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 75,199 பேர் பாதிப்­பு­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ள­னர்.
நாட்­டில் பல பகு­தி­க­ளில் தற்­போது வெயில் அதி­க­ரித்­துள்­ளது. அந்­தப் பிர­தே­சங்­கள் வறட்­சி­யால் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. வடக்கு மாகா­ணத்­தில் மன்­னார் மாவட்­டம் தற்­போது கடும் வறட்­சிக்கு உள்­ளா­கி­யுள்­
ளது.
மன்­னார் நக­ரப்­ப­கு­தியை அண்­டி­யுள்ள மக்­களே அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று மன்­னார் இடர் முகா­மைத்­து­வப் பிரி­வி­னர் தெரி­வித்­த­னர். மன்­னார் பிர­தேச செய­லா­ளர் பிர­வுக்­குட்­பட்ட பகு­தி­யில் 4ஆயி­ரத்து 448 குடும்­பங்­க­ளும், நானாட்­ட­னில் ஆயி­ரத்து 480 குடும்­பங்­­க­ளும், முச­லி­யில் 3,584 குடும்­பங்­க­ளும், மாந்­தை­யில் 5,211குடும்­பங்­க­ளும், மடு­வில் 431 குடும்­பங்­க­ளும் வறட்­சி­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.
இவர்­க­ளுக்­கான குடி­தண்­ணீர் வச­தி­களை உட­னுக்­கு­டன் மாவட்­டச் செய­ல­கத்­தின் பணிப்­பில் இடர் முகா­ மைத்­து­வப் பிரி­வி­னர் மேற்­கொண்டு வரு­கின்­ற­னர். வறட்சி மேலும் அதி­க­மா­கும் பட்­சத்­தில் அதற்­கான ஏற்­பா­டு­க­ளும் செய்­யப்­பட்­டுள்­ளன என­வும் அனைத்­துக்­கும் தயா­ரா­கவே உள்­ள­தா­க­வும் மன்­னார் இடர் முகா­மைத்­து­வப் பிரி­வி­னர் தெரி­வித்­த­னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக