ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

சம்மாந்துறையில் எதிர்பாராத வெற்றி தோல்வி!

என்னதான் பலரும் பல விதமான எதிர்வு கூறல்களை அமைத்திருந்தாலும், தேர்தல் முடிவுகளை பார்க்கின்ற போது பல அதிர்ச்சிகரமான முடிவுகளையும் பெறுவர். சம்மாந்துறை மொத்தமாக பத்து தொகுதிகளை கொண்டது. இதில் ஒன்று (வீரமுனை) மூன்று அங்கத்துவ வட்டாரமாகும். இதில் மூன்று அங்கத்தவர் வட்டாரம் உட்பட ஐந்து வட்டாரங்களை அகில இலங்கை மக்கள் காங்கிரசும், மூன்று வட்டாரங்களை மு.காவுன், இரண்டு வட்டாரங்களை சு.காவும் கைப்பற்றியுள்ளது. இதில் தோல்வியை தழுவியவர்களில் முன்னாள் பிரதேச
சபை உறுப்பினர்களான முஸ்தபா லோயர் (மு.கா), றனூஸ் (மு.கா), றியால் (அ.இ.ம.கா) மற்றும் சட்டத்தரணி சஹுபீர் (மு.கா) ஆகியோரை சுட்டிக்காட்டலாம்.
முஸ்தபா லோயர் தோல்வியை தழுவுவார் என்பது, தேர்தலுக்கு முன்பே அனைவராலும் எதிர்வு கூறப்பட்டதே! பலரும் எதிர்வு கூறியபடி அது நிகழ்ந்துவிட்டது. சட்டத்தரணி சஹுபீர் மு.காவின் ஆதரவாளர்கள் நிறைந்த வட்டாரமான விளினையடி வட்டாரத்தில் களமிறக்கப்பட்டிருந்தார். இவரை வெல்ல வைப்பது, சம்மாந்துறை மு.காவின் ஒரு முக்கிய அரசியல் பிரமுகரின் நோக்கமாக இருந்தது. இவரை எதிர்த்து அ.இ.ம.காவின் போட்டியிட்டவர் ஒரு வட்டானை. அவர் மு.காவின் பிரச்சார கூட்டத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவரிடம் சட்டத்தரணி சஹுபீர் தோல்வியுற்றது அவமானத்துக்குரியது. இருந்தாலும், இவ்வாட்டரத்தை அ.இ.ம.கா 56 வாக்குகளாலேயே வெற்றி கொண்டிருந்தது. இவரை வெல்ல வைக்கும் முயற்சியில் பா.உ உறுப்பினர் மன்சூர் அதிக பிரயத்தனங்களை எடுத்திருந்தோடு, இவரை தோல்வியடையச் செய்ய அ.இ.ம.காவின் அனைத்து பிரமுகர்களும் களமிறங்கியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
மு.கா வெற்றிகொள்ளத்தக்க வட்டாரங்களில் அனைவரும் எதிர்பார்த்த வட்டாரம், மலையடி வட்டாரமாகும். இந்த வட்டாரத்தில் மு.காவின் சார்பில் களமிறங்கிய சகோதரர் றனூஸ் வெற்றிகொள்வார் என்பது அ.இ.ம.காவினரால் கூட பேசப்பட்ட ஒரு விடயமாகும். இருந்த போதிலும், இவரை எதிர்த்து அ.இ.ம.காவில் போட்டியிட்ட சகோதரர் அஸ்வர் வெற்றிபெற்றுள்ளார். இத் தேர்தலில் சகோதரர் அஸ்வர் பெருமளவான பணத்தை செலவு செய்திருந்தார். இதனை ஈடு கொடுக்கும் பண வலிமை சகோதரர் றனூசிடம் இருந்திருக்கவில்லை.
சகோதர றனூஸ் கல்லரச்சல் பிரதேசத்தை சேர்ந்தவர். சகோதரர் அஸ்வர் மலையடிக்கிராமத்தை சேர்ந்தவர். கல்லரைச்சலை விட மலையடிக்கிராமம் கிராமம் பெருமளவான வாக்காளரகளைக் கொண்டதாகும். இதுவே சகோதர் றனூசின் தோல்விக்கான காரணமாக குறிப்பிடலாம். சகோதரர் றனூஸ் 267 வாக்குகளை பெற்று தோல்வியை தழுவியுள்ளார். இது வட்டார தேர்தல் முறையில் பெருமளவான எண்ணிக்கையாகும். சம்மாந்துறையின் இளம் அரசியல் வாதிகளில் ஒருவரான இவர், தன் அரசியல் வாழ்வுக்கு இதன் மூலம் ஒரு கரும்புள்ளியை வைத்துக்கொண்டார்.
இத் தேர்தலில் மல்கம்பிட்டி வட்டாரத்தில் சகோதரர் ரியால் களமிறங்கி இருந்தார். இவரை எதிர்த்து அவரது சகோதரர் நளீம் களமிறங்கியிருந்தார். இவ் வட்டாரத்தில் றியாலுக்கும் நளீமுக்குமிடையில் தேர்தல் நடைபெற்றது என்பதை விட, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிருக்கும் ரியாலுக்கும் இடையில் தேர்தல் இடம்பெற்றது எனலாம். மு.காவின் சார்பில் நளீமை முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிரே போட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் குறித்த ஏரியாவில் அதிக சேவைகளையும் செய்திருந்தார். ரியாலின் தேர்தல் நடவடிக்கைகள் சற்று மந்தகரமான வகையில் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.
தைக்காப்பள்ளி வட்டாரத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிரும், அவரை எதிர்த்து தம்பிக்கண்டு மாஸ்டரும் போட்டியிட்டிருந்தனர். மாஹிர் அண்மையிலேயே மாகாண சபை உறுப்பினர் என்ற பெரும் பதவியில் இருந்து விலகி, தேர்தல் கேட்டிருந்த போதும், இவ்வட்டாரத்தை 171 வாக்குகளாலேயே வெற்றிகொண்டிருந்தார். இவ்வாட்டாரம் சற்று பெரிய வட்டாரமாகும். இது முன்னாள் மாகாண சபை உறுப்பினருக்கு சவாலாக அமைந்துள்ளதை அனைவரும் அறிந்துகொள்ள முடியும். இவ்வாட்டாரத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர், பல வீடுகளுக்கு இரு தடவைகள் கூட சென்று, வாக்கு கேட்டிருந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தம்பிக்கண்டு மாஸ்டர் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கவில்லை. அவர் இவ்வட்டாரத்ததை மிக இலகுவாக வெற்றிகொள்ளக் கூடிய சந்தர்ப்பம் இருந்தும், தவறவிட்டுவிட்டார் என்றே கூற வேண்டும். இதில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிரை மு.காவிற்குள்ளேயே தோற்கடிக்க சில சதிகள் இடம்பெற்றதாகவும் நம்பப்படுகிறது.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் சம்மாந்துறை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக