வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

மஹிந்த ராஜபக்ஷ புலிகளுக்கு நிதியுதவி செய்தார்! - சம்பிக்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எல்.ரீ.ரீ. அமைப்பினருக்கு பண உதவி செய்தார் என மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

துட்டகைமுனு அல்லது பென்னம்பெரும் பலவான்கள் யுத்தம் புரியும்போது எல்லாளனுடன் எவ்வித உடன்படிக்கையும் செய்துகொள்ளவில்லை எனவும், துட்டகைமுனு பற்றிப் பேசுவதற்கு முன்னர் ராஜபக்ஷ இதுதொடர்பில் மனதிற் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துட்டகைமுனுவும் எல்லாளனும் ஒன்றாக அப்பம் சாப்பிடவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்த கூற்றுக்குப் பதிலடியாகவே சம்பிக்க ரணவக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக்கூட்டமொன்றில் கருத்துரைக்கும்போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக