திங்கள், 5 பிப்ரவரி, 2018

சென்றமுறை வெற்றிலையை வெற்றிபெறச் செய்ய நான் செயற்படவில்லை!

2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலின்போது, தான் எந்தவொரு கட்சியின் வெற்றிக்காகவும் செயலாற்றவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அதனால்தான் எந்தவொரு கட்சியும் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று, அரசாங்கம் அமைக்கமுடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

தான் அந்தத் தேர்தலின்போது, பக்கச் சார்பின்றிச் செயற்பட்டதாகவும் பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
2015 பொதுத் தேர்தல் நடைபெற்றபோது, மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் தலைவராகச் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக