செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

சந்திரிக்கா அனைத்துச் சொத்துக்களையும் விற்றுவிட்டு, இங்கிலாந்திற்குப் பயணமாகின்றார்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்க, இலங்கையை விட்டு இங்கிலாந்தில் குடியமர்வதற்காகத் தீர்மானம் எடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல்ல அமைப்பாளரான அவர், தான் தேர்தலில் தோற்றமையைக் குறித்தே இந்த முடிவினை எடுத்துளாள்ளார்.

அத்தனகல்ல பிரதேசத்தில்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 49,949 வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.  ஐக்கிய தேசியக் கட்சி 26,904 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ 13,300 வாக்களையே பெற்றது.
இலங்கையிலுள்ள தனக்குச் சொந்தமான அனைத்துச் சொத்துக்களையும் விற்கவுள்ளதாக அவர் தனக்கு மிகவும் நெருக்கமானவர் ஒருவரிடம் குறிப்பிட்டுள்ளார்.
அத்தனகல்ல பிரதேசத்தின் அமைப்பாளர் பதவியையும் மீண்டும் ஒப்படைத்துவிட்டு, மீண்டும் இலங்கைக்கு வராமல் இங்கிலாந்திலேயே தங்குவதற்கே அவர் தீர்மானித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக