ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

மர்ஷூம் கவிஞர் கலாபூஷணம் ஏ. இக்பாலின் நினைவுவேந்தல் நிகழ்வும் நூல் வெளியீடும் கவியரங்கும்

மர்ஷூம்  கவிஞர் கலாபூஷணம் ஏ. இக்பாலின் நினைவுவேந்தல் நிகழ்வும்  அவரது 'ஆய்வுகள் திறன் ஆய்வுகள்'  நூல் வெளியீடும், கவியரங்கும் எதிர்வரும் 13.02.2017 அன்று காலை 9.30 மணிக்கு பேருவளை நூன் கல்வி நிலையத்தில் திக்குவல்லை கமால் அவர்களின் தலைமையில் நடைபெறும்.

இந்த நிகழ்வில் மேமன்கவி, அஷ்ரப் சிஹாப்தீன், இளநெஞ்சன் மூர்ஷிதீன் ஆகியோர் உரையாற்றுவார்கள்.


 கௌரவ அதிதியாக கலந்துக் கொள்ளும் அல்ஹாஜ் A. L, அப்துல் பாரி அவர்கள் நூலின் முதற்பிரதியை பெற்று கொள்வார்.

அந்த நிகழ்வில் நடைபெறும் கவியரங்குக்கு கலைவாதி கலீல் அவர்கள் தலைமை வகிப்பார். இக்கவியரங்கில் கவிமணி நஜ்மூல் ஹூசைன், தர்காநகர் ஸபா, கௌசுல் அமீர் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.

கவிஞர் கிண்ணியா அமீர் அலி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக