உள்ளுராட்சித் தேர்தலின் உத்தியோகபூர்வ முதலாவது தேர்தல் முடிவு நாளை (10) இரவு 8 மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும் என ஊகிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இம்முறை 10675 நிலையங்களில் வாக்குகள் எண்ணப்படவுள்ள அதேசந்தர்ப்பத்தில், அவற்றில் 3852 நிலையங்களில் தபால்மூல வாக்கெடுப்பு நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.

இம்முறை உள்ளுராட்சித் தேர்தலின் வாக்கெடுப்புக்கள் அவ்வவ் வாக்கெடுப்பு நிலையங்களிலேயே இடம்பெறும். பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பில் வாக்கெடுப்பு நிலையங்கள் இரண்டு - மூன்று ஒன்றிணைந்தும் வாக்கெடுப்பு இடம்பெறும் எனவும் அவ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.