சனி, 10 பிப்ரவரி, 2018

வாக்களிப்பு நிறைவு! 60 வீதத்திற்கும் அதிகமானோரின் வாக்குப் பதிவு!

இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான உள்ளுராட்சித் தேர்தல் வாக்குப் பதிவுகள் தற்போது நிறைவடைந்துள்ளன.  நாடெங்கிலும் 60 வீதத்திற்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளனர்.

நாட்டின் எந்தவொரு பகுதியிலும் எந்தவொரு அசம்பாவிதமும் நிகழவில்லை எனத் தெரியவருகின்றது.

இன்னும் சில நிமிடங்களில் வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இரவு 8 மணியளவில் முதலாவது தேர்தல் முடிவு வெளியிடப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன என நம்பகத்தன்மை மிக்க செய்திகள் குறிப்பிடுகின்றன.

உள்ளுராட்சி மன்றங்கள் 340 இற்காக 8356 உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும் இந்தத் தேர்தல் 13,374 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெற்றது.

இம்முறை நடைபெற்றுமுடிந்த தேர்தலில் வாக்களிக்கப்பட்ட வாக்குகளின் வீதம் வருமாறு

களுத்துறை 70%
மாத்தறை 70%
காலி 75%
அநுராதபுரம் 75%
மாத்தளை 80%
கேகாலை 70%
அம்பாறை 70%
மொனராகலை 75%
பதுளை 65%
ஹம்பாந்தோட்டை 70%

பிற்பகல் 03.00 மணியாகும் போது,

கம்பஹா 73%
அநுராதபுரம் – 70%
கேகாலை - 69%
நுவரெலியா - 70%
பொலன்னறுவை - 68%
புத்தளம் - 70%
கிளிநொச்சி - 69%
இரத்தினபுரி - 75%
குருணாகலை - 65%
திருகோணமலை - 64%
முல்லைத்தீவு - 74%

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக