செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

தேர்தல் நடவடிக்கைகளுக்காக பெப்ரவரி 09 இல் பாடசாலைகளுக்கு விடுமுறை

நாளை (07) முதல் 19 பாடசாலைகளுக்கும் இரு கல்வியியற் கல்லூரிகளுக்கும் விடுமுறை

எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக, அனைத்துப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்க கல்வியமைச்சு முடிவுசெய்துள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ள
வாக்களிப்பு நடவடிக்கைகள் தொடர்பில், தேர்தல் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவே கல்வியமைச்சு இவ்விடுமுறையை வழங்குவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

வாக்குப் பெட்டிகள் மற்றும் ஏனைய காகிதாகிகள் விநியோகித்தல் மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் கடமைகள் தொடர்பான நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ள, 19 பாடசாலைகள் மற்றும் 02 கல்வியியற் கல்லூரிகளுக்கு நாளை (07) புதன்கிழமை முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளதாகவும் கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

இவ்வாறு மூடப்படும் பாடசாலைகள் மற்றும் கல்வியியற் கல்லூரிகள் தேர்தல் முடிவடைந்ததை அடுத்து, மீண்டும் திங்கட்கிழமை (12) திறக்கப்படவுள்ளதாகவும் கல்வியமைச்சின் அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக