புதன், 3 ஜனவரி, 2018

அச்சுறுத்தல் அதிகரிப்பதால் சுமந்திரன் உள்ளிட்ட சிலருக்கு STF பாதுகாப்பு!

தற்போது, அரசாங்கத்தினால் அமைச்சர்கள் 09 பேருக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதனால் தங்களுக்கான பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என,
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொலிஸ் அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, பைஸர் முஸ்தபா, ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுத்தீன், பழனி திகாம்பரம், மனோ கணேசன், சாகல ரத்னாயக்க உள்ளிட்டோருக்கும், அமைச்சர்களான பியசேன கமகே, தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்டோருக்குமே இப்பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக