புதன், 3 ஜனவரி, 2018

விளைச்சல் குறைந்தால் அரசாங்கம் பொறுப்புச் சொல்ல வேண்டும்!

பயிர்களுக்கான உரம் குறைவு என்பதனால் இம்முறை விளைச்சல் குறைந்தால், அதனால் ஏற்படும் நட்டத்தை அரசாங்கத்திடமிருந்து பெற்றுள் கொள்வதற்கு ஆவன செய்வோம் என அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன இன்று (03) தெரிவித்தார்.

குறித்த சந்தர்ப்பத்தில் உரம் கிடைக்காமையினால் பெரும் பிரச்சினைக்கு உள்ளாகியிருப்பதாகவும், இதுதொடர்பில் எதிர்வரும் காலப்பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக கடும் எதிர்ப்பினைக் காட்டுவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

உரத்திற்குத் தேவையான பணம் மற்றும் உரத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளோம் என்று அரசாங்கம் ஊடகச் செய்தி வெளியிட்டபோதும், பெரும்பாலான விவசாயிகளுக்கு இதுவரை குறிப்பிட்ட  அந்தப் பணத்தொகை கிடைக்கவில்லை எனவும் நாமல் கருணாரத்ன மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக