சனி, 27 ஜனவரி, 2018

மஹிந்த வாடிவதங்கிப் போனதொரு மலர்! ரஞ்ஜித் முனசிங்க

மாத்தறை மாவட்டத்தில் எந்தவொரு இடத்திலும் மொட்டு இல்லை.. அது வாடி வதங்கி, விலங்குகள் சாப்பிடுகின்ற ஒன்றாக இருக்கின்றது. அதற்கு எழும்புவதற்கு சக்தியே இல்லை. நாங்கள் தென் மாகாணத்தைக் கட்டியெழுப்புவோம். நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தைக் கட்டியெழுப்புவோம்.... என தென் மாகாண சபை உறுப்பினர் ரஞ்சித் முனசிங்க குறிப்பிட்டார்.

மொரவக்கவில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின்
பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்..

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சியைப் பலவாறாக விமர்சிக்கும் மஹிந்த ராஜபக்ஷ, மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முயற்சி செய்கின்றார். அவரால் எந்தவகையிலும் முடியாத ஒன்றுக்காக அவர் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறார்.

அவரது குடும்ப ஆட்சி பற்றி மக்களுக்கு நன்கு தெளிவாகியுள்ளது. தெற்கில் எங்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கே ஆதரவு உள்ளது என்பதை அவர் இன்னும் கண்டுகொள்ளவில்லை.

நாங்கள் இந்தத் தேர்தலில் வெற்றியீட்டினால், சமுர்த்தி இல்லாதவர்களுக்கு அதனைப் பெற்றுக் கொடுப்போம்.. வெலிகம.. ஹக்மன, மொரவக்க பிரதேசங்களை நன்கு விருத்தி செய்வோம்.. எனவும் அவரது நீண்ட உரையில் குறிப்பிட்டார்...

(கலைமகன் பைரூஸ்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக