வெள்ளி, 5 ஜனவரி, 2018

வித்தியா படுகொலை வழக்கில் விடுதலையானவர் மீண்டும் விளக்கமறியலில்!

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்குட்பட்ட சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவியின், படுகொலையில் சந்தேகநராகக் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத் தீர்ப்பில் விடுதலை செய்யப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமார் என்பவரை, மீண்டும் இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் ஊர்காவற்றுரை நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம். ரியால் உத்தரவிட்டுள்ளார்.
வித்தியா படுகொலை தொடர்பில் சந்தேகநபரைக் கைதுசெய்வதற்காகச் சென்றவேளை, பொலிஸ் அதிகாரியொருவருக்கு மரண அச்சுறுத்தல் வழங்கியதற்கமைவாக, வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டவேளை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

வித்தியா படுகொலை வழக்கில் விடுதலையானபோதும், குறித்த வழக்கு விசாரணை முடிவடைந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் மறியலில் வைக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளது. 
வித்தியா படுகொலையின் பிரதான சந்தேகநபர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றின் முன் நிறுத்தப்பட்டார். 
2015 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி வித்தியா எனும் சிறுமி கடத்திச்  செல்லப்பட்டு, கூட்டு வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு , 16 ஆம் திகதி அதிகாலை புங்குடுதீவு காட்டொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டார்.
-ரொமேஷ் மதுசங்க. (வவுனியா)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக