திங்கள், 29 ஜனவரி, 2018

ஜனாதிபதியைச் சூழ்ந்து கள்வர் கும்பல்....! அவர்களை வெட்டிச்சாய்க்க வேண்டும்!! - ரஞ்சன் (காணொளி இணைப்பு)

தங்களைச் சுற்றிக் கள்வர் கும்பல் நிறைந்து இருப்பதாகவும், அவர்களையும் வாளால் வெட்டிச் சாய்க்கவும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தான் கேட்டுக் கொள்வதாக, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிலருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் அநுதாப அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், ஐக்கிய
தேசியக் கட்சி எவ்வாறு நாட்டை ஆள வேண்டும் என சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் இருப்பதாயின், வாயைப் பொத்திக் கொண்டு இருக்குமாறு சுசில், டிலான், தயாசிரி போன்ற பாவப்பட்ட அமைச்சர்களிடம் வேண்டுவதாகவும் மேலும் அவர் குறிப்பிட்டார்.
காலியில் இடம்பெற்ற, ஐக்கிய தேசியக் கட்சியின் மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக