ஞாயிறு, 28 ஜனவரி, 2018

கல்வியைப் பரீட்சை நோக்கித் திட்டமிடுவோம்!

கல்வி இன்று விழுமியம்சார் நிலைமைகளைத் தாண்டி பெறுபேறுகளை நோக்கியதாக மாறி வருகிறது.
கல்வித் திட்டமும், கலைத் திட்ட மரபும் விழுமியக் கல்வி பற்றிப் பேசினாலும் நடைமுறையிலே நிலைமை ஆரோக்கியமாக இல்லை. பாடசாலைகள் பரீட்சைகளுக்கே மாணவர் தயார்படுத்தல்களைச் செய்கின்றன. போட்டியும் பலமாகவே நிலவுகின்றது. ஒழுக்கம், நடத்தை, விழுமியங்களை விடவும் க பொ த சா/த, உ/த பெறுபேறுகளையே அரச பாடசாலைக்கான குறிகாட்டியாக கல்வித் திணைக்களமும் நோக்குகின்றது. நாமும்
அவற்றோடு ஒன்றிணைய வேண்டும். இவற்றை ஒருபோதுமே தவிர்க்க இயலாது. மாணவர் எதிர் காலமும், பரீட்சைகளிலேயே தங்கிவிடுகின்றன.
எமது கல்வியில் பரீட்சைகளே முக்கிய பங்கை வகிக்கின்றன. (Important Role)

இலக்கு நிர்ணயிக்கப்பட வேண்டும்
---------------------------------------------------------------------
இன்று ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை, ஜீ.சீ.ஈ. (சா/த), (உ/த) என 03 பரீட்சைகள் அரசாங்க மட்டத்திலே நடாத்தப்படுகின்றன. இதில் தேசிய மட்டம், மாகாண மட்டம், மாவட்ட மட்டங்களின் சித்தி வீதங்களை நாம் நோக்க வேண்டும். குறைந்தது அந்த மட்டங்களையாவது நமது மாணவர்களாலும் எட்ட வேண்டும் என்ற நிலையில் நாம் திட்டமிட வேண்டும். அதற்காக வருட ஆரம்பத்திலேயே திட்டமிட வேண்டும். உரிய பாடசாலைகளின் நிருவாகம், ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் எல்லோருமே கலந்து பேசி இலக்கைத் தீர்மானிக்கவும், அதை அடைந்து கொள்ளவும் உழைக்க வேண்டும்.

இலக்கை அடைவதற்கான திட்டம் தீட்டப்பட வேண்டும்
---------------------------------------------------------------------------------------------------------
தீர்மானிக்கப்பட்ட இலக்கை நோக்கிய திட்டமிடல்களைச் செய்ய வேண்டும். பாடசாலைகள் உள்ளார்ந்ததாகவும், பாடசாலைக்கு வெளியில் சமூக மட்டத்திலும் இது பற்றிய கலந்துரையாடல்கள் விரிவு படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு பொதுப் பரீட்சை பற்றியும், அதற்கான தனியான அணிகளும் நியமிக்கப்பட வேண்டும். பரீட்சைக்கு தடையான காரணிகள் பொதுவான அடிப்படையிலே கழையப்பட வேண்டும்.
பாடசாலையின் சுற்று நிருபங்களுக்கு அமைவாகவும், ஏனைய தலைசிறந்த பெறுபேறுகளைப் பெறும் பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் பற்றியும் தேடிப் பார்க்க வேண்டும். அவற்றை நமது பாடசாலைகளில் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்திய நிலைமைகளை உருவாக்குவது பற்றிக் கலந்து பேச வேண்டும். எல்லா யோசனைகளும் பாடசாலையின் மாணவர்களை அடைவு ரீதியாக உயர்வடையச் செய்யும் நிலையைக் கொண்டிருக்க வேண்டும்.

திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வழிவகைகள் வகுக்கப்பட வேண்டும்
--------------------------------------------------------------------------------------------------------------------------------
பரீட்சைகள் யாவும் ஒரு வருட இடைவெளியிலே நடைபெறுகின்றன. உரிய காலத்திற்குள் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு அதற்கான வருட இறுதிப் பெறுமானம் ஈட்டப்பட வேண்டும். மாணவர்களின் ஆயத்தம் சரியான நிலையிலே இருக்க வேண்டும். இங்கே பாடத் திட்டம் (syllabus) முடிவடைவதும், பரீட்சைத் தயார்படுத்தல்கள் (preparation of exams) உத்தியோகபூர்வமாக நடைபெறுவதும் முக்கியாமாகும். பாடத் திட்டத்தை முடிவடையச் செய்வதில் கரிசனை காட்டுவது போல், பரீட்சைத் தயார்படுத்தலுக்கும் பாடசாலை நிர்வாகம் வெளிப்படையாக கரிசனை காட்ட வேண்டும். அதன் முன்னேற்றம் பற்றிய கலந்துரையாடல்கள் ஆரிரியர் தர வட்ட கலந்துரையாடல்களிலே (quality circles) பேசப்பட வேண்டும். இவை யாவற்றுக்கும் பின்னால் 'மாணவருக்கான கல்வி'என்ற அர்ப்பண (dedications) சிந்தனை ஒவ்வொரு கல்வித் துறை ஊழியர்களுக்குள்ளும் ஒழிந்திருக்க வேண்டும். எமது மாணவர்கள், அவர்களை முன்னால் கொண்டு வருவது எமது பொறுப்பாகும் என்ற கூட்டுணர்வு (co- operate) மேலோங்க வேண்டும். ஒவ்வொரு பரீட்சைக்கும் உரிய ஆசிரியர்கள் தனித்தனியாகப் பொறுப்பளிக்கப் பட்டு அவர்கள் நிருவாகத்தினால் கண்காணிக்கப் பட வேண்டும். இதற்குரிய நிதிரீதியான, வெளித் தொடர்புகளுக்காக உரிய நிருவாகம் பழைய மாணவர்களையும், பெற்றோர் சமூகத்தையும் சாதுரியமாகப் பயன்படுத்த முடியும்.

தடைகள் நீக்கப்பட வேண்டும்.
----------------------------------------------------------
ஒரு பரீட்சையிலே சிறந்த பெறுபேற்றைப் பெறுதலில் பல தடைகள் ஏற்படலாம். மாணவர் ரீதியானது, ஆசிரியர் வினைத் திறன் ரீதியானது, நிருவாக விடயங்கள், வளங்களின் கிடைப்பனவு, பெற்றோரின் ஒத்துழைப்புக் குறைவு என உரிய பிரச்சினை அடையாளம் காணப்பட்டு அவை உடன் நிவர்த்திக்கப்பட வேண்டும். இலக்கை அடைவதற்குத் தடையாக உள்ள பலவீனங்கள் (weakness) உரிய முறையிலே அணுகப்பட்டு அவை கழையப்படுவதோடு, எமது பலம் (strength) கண்டு கொள்ளப்பட்டு அவை மேலோங்கச் செய்யப்பட வேண்டும்.

ஆசிரியர்கள், அதிபர் மேலும் வலுவூட்டப்பட வேண்டும்
--------------------------------------------------------------------------------------------------------
ஆசிரியர்கள் அவர்களின் உரிய பாட இலக்கு (subjects purpose) என்ற வட்டத்தை விட்டும் வெளியிலே வர வேண்டும். பரீட்சை இலக்கு (exam purpose) என்ற ஒன்றையும் துணையாக இணைத்துக் கொள்ள வேண்டும்.
பரீட்சை பற்றிய கதைகள் மாணவரின் காதுகளுக்கு அடிக்கடி கேட்கச் செய்ய வேண்டும். எமக்கு ஓர் இலக்கு (targets) உள்ளதாகவும், அது தம்மால் எய்தப்பட வேண்டும் என்றும் மாணவர் உணர்த்தப்பட வேண்டும். மாணவர்கள் தன்னம்பிக்கையும், உறுதிப்படும் கொண்ட ஒரு குழுமமாக வளர்க்கப்பட வேண்டும். இதற்காகப் பிரத்தியேகமான ஆசிரியர், அதிபர் கலந்துரையாடல்கள், விழிப்புச் செயற்பாடுகள் நடைபெற வேண்டும்.
கடமையை விடவும் சில பிரத்தியேகமான செயற்பாடுகளுக்கு மேலதிகமான கொடுப்பனவைச் செய்ய வேண்டி வரும் போது அதைப் பாடசாலைச் சமூகம் முன் வந்து அதிபர், ஆசிரியர்களுக்குச் செய்ய வேண்டும். பாடசாலை என்பது தங்களின் இரண்டாவது வீடு (second home) என்ற உணர்வை ஆசிரியர்களும் உணர்ந்து கொண்டு பணி புரியும் மனோநிலையை உருவாக்கப்பட வேண்டும். நிருவாகத்தின் உந்து சக்தியாலேயே (pressers) இயங்கும் நிலையை விடவும் சுயமாக இயங்கும் ஆசிரியர்களால் அதிகமான பலா பலன்களை எட்ட முடியும். அத்துடன் ஆசிரியர்களுக்கான நலனோம்பு நடவடிக்கைகள் சீராகப் பேணப்பட வேண்டும்.

மாணவர் தரப்பு ஊக்குவிப்புக்கள்
(brain Storming) அதிகரிக்கப்பட வேண்டும்
------------------------------------------------------------------------------------------------------------------------
மாணவர்களுக்கான பரீட்சை பற்றியதான உள்ளார்ந்த வழிகாட்டல் பரீட்சைகள், போட்டிகளை வைத்து அதிலே சிறந்த அடைவுகளை (best performance) வெளிப்படுத்தும் மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட வேண்டும். இவற்றைப் பாடசாலையின் பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சபை ஆகியவை முன் வந்தும் செயற்படுத்த முடியும்.

எல்லா வகுப்புக்களுக்குமிடையிலான போட்டியாக இவை வடிவமைக்கப்பட்டு நடாத்தப்பட வேண்டும். மாணவர்கள் சிறந்த பெறுமதி வாய்ந்த பரிசில்களைப் பெறும் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் பரீட்சை பற்றிய அவஸ்த்தையில் (seriously) அவர்களின் கல்வி நடவடிக்கைகளைச் செய்து வரச் செய்ய வேண்டும்.

பொதுவான செயற்பாடுகளும் விழிப்படைய வேண்டியவையும்
------------------------------------------------------------------------------------------------------------------------
  • மாணவர் கல்விக்கான தடைகள் (barriers) நீக்கப்பட வேண்டும்
  • கல்விக்கான கவனக் கலைப்பான்களை (smart phone, TV, sports) அறிந்து நீக்குதல் வேண்டும்.
  • ஐந்தாம் தர புலமைப்பரிசில் தேசிய அடைவு மட்டம் என்ன? எமக்கான இலக்கு என்ன?
  • க பொ த (சா/த) தேசிய அடைவு மட்டம் என்ன ? எமது இலக்கு என்ன?
  • க பொ த (உ/த) தேசிய அடைவு மட்டம் என்ன? எமது இலக்கு என்ன?
  • பொன்ற விஞ்ஞானபூர்வமான புள்ளி விபரங்களுடனான நகர்வுகள் வகுக்கப்பட வேண்டும். அதுவே நமக்கு உரிய வெற்றியைப் பெற்றுத் தரும்.

- ஏ.எல். நௌபீர்

BA, Postgraduate Dip. In Applied Sociology, Dip. In. Eng, Dip. In. Youth in Deve. Work.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக