செவ்வாய், 2 ஜனவரி, 2018

யானை தாக்கி நெய்னா இல்யாஸ் மரணம்!

புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரயடிபிட்டி எனும் இடத்தில் இரவு 11 மணியளவில் வயல் காவலுக்குச் சென்ற விவசாயியொருவரை யானைத் தாக்கிப் பந்தாடியுள்ளது. 

தாக்குதலுக்கு உள்ளானவர் புல்மோட்டையைச் முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த, நெய்னா இல்யாஸ் என்ற 52 வயது மதிக்கத்தக்க குடும்பத்தவராவார்.
படுகாயமடைந்த நிலையில் ஊர் மக்கள் இவரை, புல்மோட்டை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரது உயிர் பிரிந்துள்ளது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக