திங்கள், 22 ஜனவரி, 2018

ஐக்கிய தேசியக் கட்சி பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்ததா? முன்னாள் ஜனாதிபதிக்கு பளார்! (வீடியோ இணைப்பு)

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் அழித்தொழிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு அண்மைக் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியால் முடிந்துள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

ஹம்பந்தோட்டையிலுள்ள ஏதுமற்ற துறைமுகத்தைத் தனக்கு ஒப்படைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஊர்களைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின், உள்ளுராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனியான பலத்தைப் பெற்றுத் தருமாறும் அவர் தெரிவித்தார்.

நிகவரெட்டியில் வார இறுதிச் சந்தை முன்றலில் இடம்பெற்ற, ஐதேக உறுப்பினர்கள் சந்திப்பின்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும்  ஜனாதிபதி, இரண்டு நாட்களுக்கு முன்னர் “ஐக்கிய தேசியக் கட்சி மூன்றாண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தைக் குட்டிச் சுவராக்கி, பொதுமக்களை அல்லோல கல்லோலப்பட வைத்துள்ளது” எனக் குறிப்பிட்டிருந்தார். அதனால் இம்முறை பொருளாதாரத்தைத் தான் கையில் எடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக