சனி, 27 ஜனவரி, 2018

ஜௌபர்கானின் அலுவலகம் மீது தீவைப்பு: அலுவலகம் எரிந்து சேதம்! (படங்கள் இணைப்பு)

காத்தான்குடியில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அலுவலகம் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டு சேதப்படுத்தப்படுள்ளது.
காத்தான்குடி நகர சபை தேர்தலில் 7ம் வட்டாரத்திற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ரீ.எல்.ஜௌபர்கானின் பிரச்சார அலுவலகமே தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டு சேதப்படுதப்பட்டுள்ளது.

இன்று(27.1.2018) சனிக்கிழமை அதிகாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
காத்தான்குடி முதலாம் குறிச்சி ஊர் வீதியிலுள்ள இந்த அலுவலகம் தாக்கப்பட்டுள்ளதுடன் அலுவலத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இதனால் அலுவலகம் எரிந்துள்ளதுடன் அலுவலகத்திற்குள் இருந்த கணணி இயந்திரம் உட்பட மற்றும் தளர்பாடங்களும் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன.
இச் சம்பவத்தையடுத்து அங்கு சென்ற காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்த்தூரி ஆராச்சி தலைமையிலான பொலிசார் ஆரம்பக் கட்ட விசாரணைகளை மேற் கொண்டதுடன் தொடர்ந்து விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
இதே நேரம் இச் சமப்வம் தொடர்பில் கபே அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.எல்.மீராசாகிப் ஸ்தளத்திற்கு சென்று விசாரணைகளை மேற் கொண்டதுடன் கபே அமைப்பின் தலைமையலுவலகத்திற்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக