வியாழன், 18 ஜனவரி, 2018

மு.கா இன் வடமாகாணசபை உறுப்பினர் பதவிக்கு பொருத்தமானவர் யார் ?

இதில் அமைச்சர் ரிஷாத்தின் காய்நகர்த்தல்கள் என்ன ? 
  
முஸ்லிம் காங்கிரசின் வடமாகாணசபை உறுப்பினராக இருந்த சகோ ரயீஸ் அண்மையில் தனது மாகாணசபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.  

அந்த வெற்றிடத்துக்கு தலைவரால் நியமிக்கப்படுபவர் துணிச்சல் உள்ளவராகவும், கட்சிக்காக இரவு பகலாக உழைக்கக்கூடியவராகவும் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு வன்னி மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் மத்தியில் காணப்படுகின்றது. 

நடைபெற்ற வடமாகாணசபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக வன்னி மாவட்டத்திலிருந்து ஒரு உறுப்பினர் தெரிவானார். அதில் விருப்பு வாக்குகள் அடிப்படையில் ரயீஸ், நியாஸ், குவைதிர்கான் ஆகியோர் முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் ஆகிய இடங்களை பெற்றார்கள்.

வன்னி மாவட்டத்தில் ஓர் ஆளுமையுள்ள தலைவராக செயல்பட்டு முஸ்லிம் காங்கிரஸை வளர்ச்சி அடைய செய்ததில் மர்ஹூம் நூர்தீன் மசூரின் பங்கு மகத்தானது. ஆனால் அவரது மறைவுக்குப் பின்பு அந்த வெற்றிடத்தினை எவராலும் வன்னி மாவட்டத்தில் மு.கா சார்பாக நிறப்ப முடியவில்லை. இந்த பலவீனம்தான் அகில இலங்கை மக்கள் காங்கிரசை அங்கு வேரூன்றச் செய்தது.

வன்னி மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸை பலமடையச் செய்வதென்றால் ஆளுமையற்றவர்களின் கைகளுக்கு அரசியல் அதிகாரம் சென்றுவிடக்கூடாது என்பதுதான் வன்னி மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளின் நிலைப்பாடாகும். 

இன்று வெற்றிடமாக இருக்கின்ற மாகாணசபை உறுப்பினர் பதவி இரண்டாம் இடத்தில் உள்ள நியாஸ் அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்றே அமைச்சர் ரிசாத் பதியுதீனும் விரும்புகின்றார். 
துணிச்சலும், அரசியல் ஆளுமையும் உள்ள குவைதிர்கான் போன்றவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அரசியல் அதிகாரத்துக்கு வந்தால், அது தனது அரசியலை பாதிக்கும் என்ற அச்சத்தின் காரணமாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் காய் நகர்த்துவதாக அறியக்கிடைக்கின்றது.    

ஊழல் சம்பந்தப்பட்ட விடயங்களில் தனக்கு தொடர்ந்து தலையிடியை தருகின்ற குவைதிர்கான் அவர்களுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் வெற்றிடமாக இருக்கின்ற மாகாணசபை உறுப்பினர் பதவி கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக முஸ்லிம் காங்கிரஸில் உள்ள சில பிரமுகர்கள் ஊடாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் செயல்படுவதாக அறியக்கிடைக்கின்றது.
எனவே வன்னி மாவட்டத்தில் பழைய நிலைமைக்கு முஸ்லிம் காங்கிரஸை கொண்டுவருவதென்றால் ஆளுமை உள்ளவர்களின் கைகளுக்கு அரசியல் அதிகாரம் சென்றடையவேண்டும். 

அதனால் வெற்றிடமாக உள்ள மாகாணசபை உறுப்பினர் பதவிக்கு சகோ குவைதிர்கான் அவர்களை நியமிப்பதுதான் வன்னி மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸுக்கு பலமாக அமையும் என்பது அங்குள்ள போராளிகளின் எதிர்பார்ப்பாகும்.     

முஹம்மத் இக்பால் 
சாய்ந்தமருது   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக