சனி, 6 ஜனவரி, 2018

தமிழைத் தொடக்கத்திலேயே கொன்றுவிட்டது மஹிந்த கட்சி!

மஹிந்தவின் பொதுஜன முன்னணி கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (5) கொழும்பில் இடம்பெற்றது. தொடக்கத்திலேயே தமிழைக் கொலை செய்துவிட்டனர். படத்தைப் பாருங்கள். 

தமிழ் பேசும் மக்களின் விடயத்தில் இவர்கள்
தொடர்ந்தும் அதே பழைய நிலைப்பாட்டில்தான் உள்ளனர் என்பது இதன்மூலம் தெளிவாகத் தெரிகின்றது.

கடந்த கால அரசியல் நிகழ்வில் இருந்து இவர்கள் சிறிதளவேனும்  பாடம் கற்கவில்லை. இனமும், மதமும் மொழியும் உணர்வுபூர்வமானவை என்றும் அவை கவனமாகக் கையாளப்பட வேண்டும் என்றும் தெரிந்தும்கூட, இவர்கள் அவற்றைத் தொடர்ந்தும் புறக்கணித்தே வருகின்றனர்.

இப்போது ஆட்சியில் இருப்பவர்களுக்கும் ஆட்சிக்கு வரத்துடிக்கும் இந்த மஹிந்த தரப்பினருக்கும் தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் மாத்திரமே தேவை. தமிழ் பேசும் மக்கள் அல்லர்.

இவ்வாறான பேரினவாத சக்திகளிடமிருந்து எங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால் தமிழ்-முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்த அரசியல் சக்தியாக மாறுவதைத் தவிர வேறு வழியில்லை.

[எம்.ஐ.முபாறக்-சிரேஷ்ட ஊடகவியலாளர்]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக