வெள்ளி, 5 ஜனவரி, 2018

முஸ்லிம்களின் ஏக பிரதிநிதி எது? தெளிவுறுத்துகிறார் சுமந்திரன் எம்.பி

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும், தமிழ் பேரவையை சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையிலான நிகழ்ச்சி ஒன்று கடந்த வாரம் நடைபெற்றது.  

அதில் கஜேந்திரகுமார் கூறும்போது முஸ்லிம் காங்கிரசுடன் உறவை பேணிவருகின்ற தமிழ் தேசிய
கூட்டமைப்பினர் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் ஏன் முஸ்லிம் மக்களின் பிரதிநிதியான முஸ்லிம் காங்கிரசுடன் பேசவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

அவரது உரையாடலில் இரண்டு விடயங்களை தெளிவாக காணக்கூடியதாக இருக்கின்றது.

அதாவது முஸ்லிம் காங்கிரசுடன் உறவை பேணும் நீங்கள் வட கிழக்கு இணைப்பு விடயத்தில் சோரம் போய் விட்டீர்கள் என்றும், முஸ்லிம் காங்கிரசுக்காக கிழக்கை தாரைவார்த்து கொடுத்துவிட்டீர்கள் என்றும் சுமந்திரனை பார்த்து கஜேந்திரகுமார் குற்றம் சாட்டினார்.

வடக்குடன் கிழக்கை இணைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் டயஸ்போராவுக்கு சோரம்போய் விட்டது என்று எமது சில முஸ்லிம் அரசியல்வாதிகள் பரவலாக குற்றம் சாட்டுகின்ற வேளையில், தமிழ் தரப்பின் உறுதியான கொள்கையினை பின்பற்றுகின்ற கஜேந்திரகுமார் அவர்கள் முஸ்லிம் காங்கிரசிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு சோரம்போய் விட்டது என்று பகிரங்கமாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

இதில் காலத்துக்கு காலம் தங்களது நிறத்தினை மாற்றிக்கொண்டு பணத்துக்கும், சலுகைகளுக்கும் விலைபோகின்ற எமது சில சில்லறை அரசியல்வாதிகளின் கருத்தை ஏற்பதா? அல்லது அற்ப சலுகைகளுக்கு சோரம்போகாத மாவீரனின் புதல்வர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கருத்தினை ஏற்பதா?

அத்துடன் இவரது இரண்டாவது விடயமானது முஸ்லிம் மக்களின் ஏக பிரதிநிதி முஸ்லிம் காங்கிரஸ்தான். எனவே முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி முஸ்லிம் காங்கிரசுடன்தான் பேசவேண்டும் என்ற கருத்தினையும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

-முஹம்மது இக்பால்
சாய்ந்தமருது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக