முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்க்கும் போது, அநீதி இழைக்கப்பட்டால், குறிப்பிட்ட பாடசாலைக்கும் பின்னர் கல்வியமைச்சுக்கு அல்லது குறிப்பிட்ட பாடசாலை அமைந்துள்ள மாகாணக் கல்வியமைச்சுக்கும் முறையீடுகளுக்கு ஒத்ததான மேன்முறையீடுகளைச் செய்யுமாறு கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
அநீதியிழைக்கப்பட்டவர்களுக்கு உதவி நல்குவதற்காக, விசேட  நிவாரண அலகொன்று ஏற்படுத்தப்படுத்தப்பட்டு அதன்மூலம் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்காக ஆவன செய்யப்பட்டுள்ளதாக அமைச்சின் பாடசாலைகள் ஒருங்கிணைப்பு அலகு குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டு மாணவர்களை முதலாம் ஆண்டுக்குச் சேர்ப்பதற்காக, 15 ஆம் திகதி சகல ஏற்பாடுகளையும் செய்யுமாறு அனைத்துப் பாடசாலைகளுக்கும் தேவையான அறிவுறுத்தல்களை கல்வியமைச்சு வழங்கியுள்ளது எனவும் தெரியவருகின்றது.