திங்கள், 22 ஜனவரி, 2018

இருவாரங்களில் “லஞ்சீட்”, “பொலித்தீன்” பைகளது விலையில் மாற்றம்!

தற்போது அதிக விலையில் விற்கப்படும் வரையறுக்கப்பட்ட தரநிலைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட லஞ்ச் சீட் மற்றும் பொலிதீன் பை ஆகியவற்றின் விலைகளை எதிர்வரும் இரு வாரங்களில் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அனைத்து இலங்கை பொலிதீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீள்சுழற்சியாளர்களது சங்கம்
தெரிவித்துள்ளது.

குறித்த உற்பத்திகளுக்காக தேவைப்படும் திரவியங்கள் அடங்கிய 40 இற்கும் அதிகமான கண்டைனர்கள் இவ்வாரத்தினுள் கொழும்பு துறைமுகத்தினை வந்தடைய உள்ளமையால் குறித்த விலை குறைப்புக்கு அதிக வாய்ப்புக்கள் உண்டு என குறித்த சங்கத்தின் செயலாளர் அநுர ஹேரத் தெரிவித்துள்ளார்.
சந்தையில் விற்கப்படும் லஞ்ச் சீட் ஒன்றின் விலை 2.50 வரையிலும் பொலிதீன் பை ஒன்றின் விலை 2.30 வரையிலும் விற்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக