வெள்ளி, 19 ஜனவரி, 2018

இரண்டாம் கட்ட விடைப்பத்திர திருத்தப்பணிகளுக்காக விடுமுறை!

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைப்பத்திர திருத்தப்பணிகளுக்காக, 5 பாடசாலைகள் இம்மாதம் 23 ஆம் திகதியிலிருந்து பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதிவரை மூடப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு சீ.டப்ளிவ்.டப்ளிவ். கன்னங்கர வித்தியாலயம், மாத்தறை மத்திய மகா
வித்தியாலயம், குருணாகலை சீ. டப்ளிவ்.டப்ளிவ். கன்னங்கர வித்தியாலயம், கண்டி புனித அந்தோனி மகளிர் பாடசாலை, பதுளை ஊவா மத்திய மகா வித்தியாலயம் என்பனவே அவ்வாறு மூடப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது. 

அவ்வாறு மூடப்படும் பாடசாலைகள், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. 

விடைப் பத்திரத் திருத்தப் பணிகளுக்காக இன்னும் 19 பாடசாலைகளின் பகுதிகள்  மூடப்படவுள்ளதாகவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. 

அப்பாடசாலைகளில் பரீட்சை விடைப் பத ்திரத் திருத்தப் பணிகள் நடைபெறும் அதேவேளை, கல்வி நடவடிக்கைகளும் நடைபெறும் எனவும் அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

(கேஎப்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக