சனி, 27 ஜனவரி, 2018

ஐதேக வேட்பாளர் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுவிட்டு தப்பியோட்டம்!

மஹியங்கனையில் சம்பவம்


ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து மஹியங்கனை பிரதேச சபைக்காகப் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், அதே பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியொருத்தியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு தலைமறைவாகியுள்ளார்.
இவ்வேட்பாளர் ஓர் ஆசிரியராவார். மேலும் அவர், அவர் சேவை செய்கின்ற அதே பாடசாலையைச் சேர்ந்த, தரம் 10 இல் கல்வி கற்கும்
மாணவியொருவரையே அவர் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

மாணவியின் வீட்டிலேயே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளதுடன், மாணவி கிராந்துருகோட்டை வைத்தியசாலையில் அநுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார்.

இதுதொடர்பில் பிரதேசவாசிகள் கருத்துத் தெரிவிக்கும்போது, குறித்த பிரதேசத்தின் பிரபல அரசியல்வாதியொருவரின் வீட்டிலேயே குறித்த நபர் அடைக்கலம் புகுந்திருக்கின்றார் எனவும்,  பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் இதுதொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்தும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை எனவும் குறிப்பிடுகின்றனர்.

1 கருத்து: