திங்கள், 22 ஜனவரி, 2018

வெலிகம நகரசபைக்காக போட்டியிடும் வேட்பாளரின் ஆதரவாளர் ஐதேக ஆதரவாளரால் நையப்புடைப்பு!

வெலிகம நகர சபைக்காக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுகின்ற, அஷ்பாக் மஹ்ரூப் அவர்களின் ஆதரவாளரான ஜிஸ்மி என்பவரை, ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர் ஒருவர் தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர் வெலிகம - வலான ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பில் வெலிகம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என அஷ்பாக் மஹ்ரூப் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.

(கேஎப்)

1 கருத்து: