திங்கள், 8 ஜனவரி, 2018

ஈஸ்வரன் ஐயாவின் மறைவு வலம்புரி கவிதா வட்டத்திற்கும் பேரிழப்பே!

வலம்புரி கவிதா வட்டம் எனும் வகவம்  2014 ல் மீள் ஆரம்பம் செய்து வைக்கப்பட்டபோது எமது முதலாவது சிறப்பதிதியாய் கலந்து எம்மை கௌரவப்படுத்தியவர். ஒரு சிறந்த எழுத்தாளராக, சிறப்பான பேச்சாளராக தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டவர்.  பல நிறுவனங்களின் அதிபதியாய், 
பல நூறுபேரின் முதலாளியாய் இருந்தபோது கூட எளிமைதான் அவரது அணிகலனாக இருந்தது. எல்லா இலக்கியவாதிகளையும் அவர்களது பொருளாதார சூழலை கருத்திற் கொள்ளாது தனக்கு அருகில் வைத்து பழகியவர். நகைச்சுவை உணர்வுமிக்க சிறந்த இலக்கியவாதி. 
தேசபந்து உயர்திரு தெ. ஈஸ்வரன் ஐயாவின் மறைவு வலம்புரி கவிதா வட்டத்திற்கும் பேரிழப்பாகும். 

எம்மைப் போன்றே அவரைப் பிரிந்து தவிக்கும் அன்னாரது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் வலம்புரி கவிதா வட்டம் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக