திங்கள், 1 ஜனவரி, 2018

பள்ளிவாசல் நீர்த்தடாகத்தில் நீராடிய இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

காலி மக்குலுவ ஜும்ஆப் பள்ளிவாசல் நீர்த்தடாகத்தில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

வெலிகம, புதியதெரு - மலப்பலாவ எனும் இடத்தைச் சேர்ந்த, ஒரே வயதுடைய (17) இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

வெலிகமயிலிருந்து காலியிலுள்ள தம் உறவினர் வீட்டிற்கு வந்திருந்த, முஹம்மது நஜீப் முஹம்மது பஸ்லான்,
முஹம்மது ஸலீம் முஹம்மது அக்தார் எனும் இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

நீரில் மூழ்கடிக்கப்பட்ட இருவரும் காலி - கராப்பிட்டிய போதனா வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இருவரினதும் ஜனாஸாக்கள் தற்போது கராப்பிட்டிய வைத்தியாசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிந்திய செய்தி
--------------------------
உயிரிழந்த வெலிகாமம், புதியதெரு - மலப்பலாவையைச் சேர்ந்த முஹம்மது அக்தார் மற்றும் முஹம்மது பஸ்லான் இருவரினதும் ஜனாஸா, நாளை (02) காலை 8 மணிக்கு, வெலிகாமம் - புதியதெரு முஹியத்தீன் ஜும்ஆப் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக