புதன், 10 ஜனவரி, 2018

2021 இல் மைத்திரிக்கு ஜனாதிபதியாக முடியுமா?

பதவிக்காலத்தை முடிவெடுக்க ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழு

மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் தொடர்பாக முடிவெடுப்பதற்காக, உயர் நீதிமன்றத்தின் ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளது.

தனது பதவிக்காலம் 2020 இல்
முடிவுறுகிறதா இல்லை 2021 இல் முடிவுறுகிறதா? என்று விளக்கமளிக்குமாறு ஸ்ரீலங்கா உயர் நீதிமன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனகோரிக்கை விடுத்திருந்தார்.

எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் இதற்கான பதிலைத் தருமாறும் அவர் கேட்டிருந்தார்.

இந்நிலையில் நாளை (11) உயர் நீதிமன்றின் திறந்த அமர்வொன்றில் இதுகுறித்து ஆராயப்படவுள்ளது.

ஐந்து நீதியரசர்களைக் கொண்ட அமர்வில் இதுபற்றிய விசாரணைகளை நடாத்தி, தீர்வினை அளிக்கவுள்ளதாக இலங்கைத் தலைமை நீதியரசர் பிரியசாத் டெப் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக