புதன், 10 ஜனவரி, 2018

2021 ஆம் ஆண்டுவரை பதவியில் இருக்க முடியுமா ? என உயர்நீதிமன்றிடம் கேட்கிறார் ஜனாதிபதி!

தற்போதைய அரசாங்கத்தின்கீழ் நிறைவேற்றப்பட்ட 19 ஆவது அரசியலமைப்பின் திருத்தச் சட்டத்தின்படி, தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளா இல்லை ஆறு ஆண்டுகளா என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு என்ன என வினவப்பட்டுள்ளது.
19 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட சந்தர்ப்பத்தில்
ஜனாதிபதியாகவிருந்த ஜனாதிபதிக்கும் அது பொருத்தமுடையதா? எனவும் வினவப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றின் தீர்மானத்தை இம்மாதம் 14 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுத்தருமாறும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ள அதேவேளை, உயர் நீதிமன்றின் பதிவாளரினால் அந்த வேண்டுகோளானது  நாளை (11) ஆராயவுள்ளதாக  வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதுஎவ்வாறாயினும், இதன்மூலம் எதிர்பார்க்கப்படுவது என்னவென்றால், 20121 ஆம் ஆண்டு வரை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருக்க முடியுமா என்பதே.
இதன் சிறப்பு என்னவென்றால், தான் ஜனாதிபதியாக பதவியேற்று 100 நாட்களில் அப்பதவியிலிருந்து விலகிக் கொள்வேன் என்று பகிரங்கமாக அறிவித்து, வெற்றிக்கொடி நாட்டிய ஜனாதிபதி தனது மூன்றாவது வருடத்தை ஜனவரி மாதம் 8 ஆம் திகதி கொண்டாடுகின்றபோதே இதனை வினவியதுதான்.
19 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட காலகட்டத்தில், அரசாங்கத் தரப்பினர், 6 வருட ஜனாதிபதியின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளாகக் குறைத்து புதிய ஜனாதிபதி உலகிற்கு புதுவழி காட்டியிருக்கின்றார் என்று குறிப்பிட்டனர். பதவி மோகமே அற்றவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என ஒரு சாரார் எங்கும் கூறிவந்தனர்.
ஜனவரி 8 ஆம் திகதி மூன்றாண்டு பூர்த்தியைக் கொண்டாடிய ஜனாதிபதியினால்,  காலஞ்சென்ற  மாதுலுவாவே சோபித்த தேரரின் பெயரில் ராஜகிரிய மேம்பாலம் திறந்துவைக்கப்பட்டது. 

சோபித்த தேரர் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி வெற்றிவாய்ப்புக்கு தோளோடு தோள் நின்றார். அப்போது அவரது பேச்செல்லாம் ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதை ஒட்டியே இருந்தது. 

உபயம்  -  https://www.colombotelegraph.com/index.php/shocking-blow-to-yahapalanaya-from-sirisena-asks-sc-if-he-can-continue-as-president-until-2021/
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக