திங்கள், 8 ஜனவரி, 2018

அரச இசை விருது விழா - 2018 விண்ணப்பங்கள் கோரல்

சிறந்த இசைப் படைப்புக்களால் நாளைய இசை உலகை ஆளப்போகும் எமது இசைக் கலைஞர்களை கௌரவிக்கும்

அரச இசை விருது விழா - 2018

2016 ஆம் மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த (தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளிலான) படைப்புக்களில் கீழ்வரும் பிரிவுகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

போட்டிப் பிரிவு இலக்கங்கள் போட்டிப் பிரிவுகள்

1. சிறந்த பாடல் (ஆண்) தனி – சிங்களம்
2. சிறந்த பாடல் (ஆண்) தனி – தமிழ்
3. சிறந்த பாடல் (ஆண்) தனி – ஆங்கிலம்
4. சிறந்த பாடல் (பெண்) தனி – சிங்களம்
5. சிறந்த பாடல் (பெண்) தனி – தமிழ்
6. சிறந்த பாடல் (பெண்) தனி – ஆங்கிலம்
7. சிறந்த பாடல் மெட்டு மற்றும் இசையமைப்பு – சிங்களம்
8. சிறந்த பாடல் மெட்டு மற்றும் இசையமைப்பு – தமிழ்
9. சிறந்த பாடல் மெட்டு மற்றும் இசையமைப்பு – ஆங்கிலம்
10. சிறந்த பாடல் வரிகள் ஆக்கம் - சிங்களம்
11. சிறந்த பாடல் வரிகள் ஆக்கம் - தமிழ்
12. சிறந்த பாடல் வரிகள் ஆக்கம் - ஆங்கிலம்
13. சிறந்த பாடல் திரை ஒளி ஆக்கம் (தயாரிப்பாளர்) – சிங்களம்
14. சிறந்த பாடல் திரை ஒளி ஆக்கம் (தயாரிப்பாளர்) – தமிழ்
15. சிறந்த பாடல் திரை ஒளி ஆக்கம் (தயாரிப்பாளர்) – ஆங்கிலம்
16. சிறந்த சிறுவர் பாடல் (சிறுவன்) – சிங்களம்
17. சிறந்த சிறுவர் பாடல் (சிறுவன்) – தமிழ்
18. சிறந்த சிறுவர் பாடல் (சிறுவன்) – ஆங்கிலம்
19. சிறந்த சிறுவர் பாடல் (சிறுமி) – சிங்களம்
20. சிறந்த சிறுவர் பாடல் (சிறுமி) – தமிழ்
21. சிறந்த சிறுவர் பாடல் (சிறுமி) – ஆங்கிலம்
22. சிறந்த சிறுவர் பாடல் மெட்டு மற்றும் இசையமைப்பு – சிங்களம்
23. சிறந்த சிறுவர் பாடல் மெட்டு மற்றும் இசையமைப்பு – தமிழ்
24. சிறந்த சிறுவர் பாடல் மெட்டு மற்றும் இசையமைப்பு – ஆங்கிலம்
25. சிறந்த சிறுவர் பாடல் வரிகள் ஆக்கம் - சிங்களம்
26. சிறந்த சிறுவர் பாடல் வரிகள் ஆக்கம் - தமிழ்
27. சிறந்த சிறுவர் பாடல் வரிகள் ஆக்கம் - ஆங்கிலம்
28. சிறந்த கிராமிய பாடல் வடிவம் புதிய நிர்மானம் (திறந்த)
(இதற்காக பாரம்பரிய இசை மற்றும் இசை உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும். ஆகக் கூடிய காலம் 05-07 நிமிடங்களுக்குள் இருத்தல் வேண்டும்.)

போட்டிகளுக்கான நிபந்தனைகள்

இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும்.
படைப்பாளரால் ஃ கலைஞரால் மாத்திரம் விண்ணப்பங்கள் அனுப்பப்படல் வேண்டும் என்பதுடன், 2016 ஜனவரி 01 ஆம் திகதி தொடக்கம் 2017 டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் வெளிவந்த படைப்புக்கள் மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும்.
(குறித்த படைப்புக்களானவை அந்த வருடத்திற்குள் வெளிவந்தவை என்பதனை உறுதிப்படுத்திய சான்றிதழை இணைக்கவும்)
சுய படைப்பாக இருத்தல் வேண்டும். மானிட வாழ்க்கை முறைக்கு பாதகம் இல்லாத படைப்புக்களாக இருத்தல் வேண்டும்.
உயர்தரத் தொழிநுட்பப் படைப்புக்களாக இருத்தல் வேண்டும் என்பதுடன் ஆக்கபூர்வமானதும் தரமானதுமான படைப்புக்களாக இருத்தல் வேண்டும்.
ஒவ்வொரு போட்டிப் பிரிவுகளுக்கும் தனித் தனியாக விண்ணப்பப்படிவங்கள் மற்றும் தனித் தனியான இறுவெட்டுக்களை அனுப்புதல் வேண்டும்.
பாடல் வரிகளுக்காக விண்ணப்பிக்கும் போது இறுவெட்டுடன் குறித்த பாடலின் வரிகளை யு4 தாளில் அச்சிட்டு 05 பிரதிகள் அனுப்புதல் வேண்டும்.
தங்களால் சமர்ப்பிக்கப்படும் இறுவெட்டுக்கள் மதிப்பீட்டின் பின் திருப்பி வழங்கப்படமாட்டாது.
சிறுவர் பாடல் பிரிவிற்காக 2018.01.31 ஆம் திகதியன்று வயது 08-15 இற்கு இடைப்பட்டவர்களாக இருத்தல் கருத்திற்கொள்ளப்படும். அதாவது 2003.01.31 ஆம் திகதி தொடக்கம் 2010.01.31 ஆம் திகதிக்குள் பிறந்திருத்தல் வேண்டும். பிறப்புச் சான்றிதழ் இணைக்கப்படல் கட்டாயமானதாகும்.
சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் வெவ்வேறாக விருதுகள், சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்படும்.
ஒரு படைப்பாளிக்கு ஒரு போட்டிப்பிரிவுக்காக ஆகக் கூடியது மூன்று (03) படைப்புக்கள் சமர்ப்பிக்கமுடியும் என்பதுடன் ஆகக் கூடிய மூன்று போட்டிப் பிரிவுகள் என்னும் அடிப்படையில் 09 விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். அதற்கு மேலதிகமாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
ஒவ்வொரு போட்டிப் பிரிவிற்கும் கட்டாயமாக தனித் தனியேயான விண்ணப்பப்படிவங்கள் மற்றும் தனித் தனியேயான இறுவெட்டுக்கள் அனுப்பப்படுதல் வேண்டும்.
ஏதேனும் வகையில் மேற் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு மாறாக செயற்பட்டிருத்தல் உறுதிசெய்யப்படுமாயின் தங்களால் அனுப்பி வைக்கப்பட்ட படைப்புக்கள் நிராகரிகப்படுவதுடன் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்து நடாத்தப்படுகின்ற எந்தவொரு அரச விருது விழாவிற்கும் விண்ணப்பிக்க முடியாதவாறு தடை விதிக்கப்படும் என்பதனை விண்ணப்பத்தாரிகள் கவனத்திற்கொள்ளவும்.
நடுவர்களின் தீர்ப்பே இறுதி முடிவாகும்.


போட்டிக்காக விண்ணப்பிக்க விரும்பும் அனைத்து விண்ணப்பதாரிகளும் இம் மாதிரி விண்ணப்பப்படிவத்தினை தயாரித்து, தெளிவாகவும் சரியாகவும்  பூரணப்படுத்தி, இறுவெட்டுடன் 2018 மார்ச் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் “அரச இசை மேம்பாட்டு பிரிவு, கலாசார அலுவல்கள் திணைக்களம், 8ம் மாடி, செத்சிறிபாய, பத்தரமுல்லை” என்ற முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கவும். அனுப்பும்போது கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “ அரச இசை விருது விழா -2018” என்று குறிப்பிட்டு அனுப்பவும்.
அனுஷா கோகுல பெர்னாந்து
பணிப்பாளர்
கலாசார அலுவல்கள் திணைக்களம்

மேலதிக தொடர்புகளுக்கு:  011-2872036, 011-2872031, www.culturaldept.gov.lk 

----------------------------------------------------------------------------------------------

அலுவலக உபயோகத்திற்கு

அரச இசை விருது விழா -2018

மாதிரி விண்ணப்பப்படிவம்

1. போட்டிப் பிரிவு  ……………………………………………………………….………….
2. போட்டிப் பிரிவு இலக்கம்:……………………………………………………….………….
3. விண்ணப்பதாரியின் பெயர் (முதலெழுத்துக்களுடன்) ……………………………………
…………………………………………………………………………………………..
4. முகவரி:……………………………………………………………………………….…..…
                  ………………………………………………………………………………….…..
5. பிரதேச செயலகம்:………………………………………………………………………..
6. மாவட்டம்:……………………………………………………………………………………
7. தொலைபேசி இலக்கம்:……………………………………………….………………...…
8. மின்னஞ்சல் ஃ தொலைநகல்:………………………………………………………..……
9. பிறந்த திகதி:…………………………………………..…………………………………
10. தேசிய அடையாள அட்டை இலக்கம்:………………………………………………….
11. படைப்புக்கான பங்களிப்பு வழங்கிய வேறு கலைஞர்கள்
பாடல் வரிகள் :……………………………………………………………….
இசை :……………………………………………………………….
பாடல் :……………………………………………………………….
வேறு :……………………………………………………………….

அரச இசை விருது வழங்கல் விழாவுக்காக என்னால் விண்ணப்பிக்கப்படும் இந்த படைப்புக்கள் அனைத்தும் சுயமாக என்னால் உருவாக்கப்பட்டது எனவும், 2016 ஜனவரி 01 ஆம் திகதி தொடக்கம் 2017 டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் உருவாக்கப்பட்டது எனவும் உறுதிப்படுத்துகின்றேன்.

மேலும் இப் போட்டிக்கான நிபந்தனைகள் மற்றும் நடுவர்களினால் வழங்கப்படும் அனைத்துத் தீர்ப்புக்கள் சரியானவை எனவும் ஏற்றுக்கொள்வேன் என்பதனை அறியத்தருகின்றேன்.
…………………………………..
விண்ணப்பதாரியின் கையொப்பம்    திகதி:……………………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக