சனி, 6 ஜனவரி, 2018

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் 11 பேர் காயம்!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 95.5 கிலோ மீட்டர் தூண் அருகே இன்று (06) பகல் வேளை வேன் ஒன்றில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட விபத்தில் 11 பேர் காயமடைந்து, காலி கராப்பிட்டிய போதனா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலைத் தகவல் வழங்கும் மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

காயப்பட்டவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமானதாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரத்திலிருந்து தெரிவிக்கப்படுகின்றது.
காலியிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த வேன் வண்டியொன்றின் சாரதி, வேகத்தைக் கட்டுப்படுத்தவியலாமல் பாதுகாப்பு வேலியில் மோதியே இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக, அதிவேக நெடுஞ்சாலைப் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
விபத்துத் தொடர்பில், தெற்கு அதிவேக நெடுஞ்சாலைப் பொலிஸாரும், அக்மீமனப் பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(ல.தீ)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக