இன்று(05) ஜும்ஆத் தொழுகையின் பின்னர் அக்கரைப்பற்று பட்டினப்பள்ளி வட்டார NFGG (பிரதித்தவிசாளர்) வேட்பாளர் ஸிராஜ் மஷ்ஹுர் அவர்களது துண்டுப்பிரசுர விநியோகத்தின்போது அவற்றைப் பறித்து கிழித்தெறிந்ததோடு தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டவர்களது நடவடிக்கைகளை நாகரீகமான ஜனநாயக அரசியல் செய்யும் சகல தரப்புக்களும் வன்மையாக
கண்டிக்கின்றன.
மூன்று தசாப்தகால முஸ்லிம் அரசியல் சமூகத்தை இன்று தேசிய அளவிலும் மாகாண அளவிலும் “பிச்சை வேண்டாம் நாயைப்பிடி” என்ற இழிநிலைக்கு இட்டுச் சென்றுள்ள நிலையில் இருப்பவற்றையும் நாம் இழந்து கொண்டிருக்கிறோம்.
இன்று பல்வேறு தேசிய மற்றும் பிராந்திய அரசியல் கட்சிகளிலும் சயேட்சைக் குழுக்களிலும் பாரம்பரிய மாமூல் அரசியல் கலாசாரத்தில் முற்றுமுழுதான மாற்றத்தை விரும்புகிற அறிவும் ஆளுமையும் தகைமைகளுமுள்ள இளைஞர்கள் களமிறங்கியுள்ளமை வரவேற்கத்தக்க, எதிர்காலம் குறித்த நம்பிக்கைகள் தரும் முன்னேற்றமாகும்.
சகல தரப்பினரும் தத்தமது எல்லைகளை உணர்ந்து அடுத்தவர்களது உரிமைகளை மதித்து நடப்பதே சமூகத்திற்கும் தேசத்திற்கும் அவர்கள் செய்யும் மிகப் பெரிய சேவையாகும்.
- இனாமுல்லாஹ் மஸீஹுத்தீன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக