ஞாயிறு, 31 டிசம்பர், 2017

உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கு சிவப்பு விளக்குக் காட்டுகிறார் ஜனாதிபதி!

எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் வெற்றியீட்டும் தலைவர்களும், உறுப்பினர்களும் இலஞ்சம், ஊழல், மோசடிகளில் ஈடுபடுதவதற்கு தான் எவ்வகையிலும் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.

அவ்வாறு செயற்படும் உள்ளுராட்சித் தலைவர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் எதிராக சட்டத்தின் மூலம் உச்ச தண்டனை வழங்குவதற்கு ஆவன
செய்யப்படும் எனவும், இன்று (31) பொலன்னறுவை - திம்புலாகல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சென்ற அரசாங்கமும் தோல்வியைச் சந்திப்பதற்கு முக்கிய காரணமாக, முன்னாள் தலைவர்களில் சிலரின் செயற்பாடுகள் இருந்தமையும் குறிப்பிட்டுக் காட்டப்பட வேண்டியதொன்றாகும் எனவும் மேலும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக