ஞாயிறு, 31 டிசம்பர், 2017

நாளை முதல் பொலித்தீன் தடை!

உணவு பொதிசெய்யும் பொலித்தீன் உட்பட கனம் கூடிய பொலித்தீன்களைப் பயன்படுத்துவதும், அவ்வகையான பொருட்களை உற்பத்தி செய்வதும் விற்பனை செய்வதும் தடை என மத்திய சுற்றாடல் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

சென்ற செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் இந்தத் தடை விதிக்கப்பட்டாலும், நாளை (2018.01.01) வரை இதற்கான சலுகைக் காலக்கெடு வழங்குவதாக பின்னர் தீர்மானிக்கப்பட்டது.

தேசிய, மத, சமூக, கலாச்சார, அரசியல் எவ்வகைக் கூட்டங்களாக இருந்தபோதும் பொலித்தீன் பயன்படுத்துவது தடை எனவும் அவ்வதிகார சபை குறிப்பிட்டுள்ளது. 

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் கலாநிதி லால் மர்வின் தர்மசிரி இது தொடர்பில் குறிப்பிடும்போது, நாளை (01) முதல் பொலித்தின் ஏக விற்பனையாளர்கள் பற்றிய தேடுதலில் ஈடுபடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எதுஎவ்வாறாயினும், பொலித்தின் உற்பத்தியாளர்களுக்கு அரசாங்கம் ஏற்கனவே குறிப்பிட்டவாறு எந்தவொரு சலுகையும் இதுவரை கிடைக்கவில்லை என அகில இலங்கை பொலித்தின் உற்பத்தியாளர்களினதும் மீள்சுழற்சியாளர்களினதும் சங்கம் குற்றம் சாட்டுகின்றது.

இன்று (31) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது, அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போது, இது இவ்வாறு அமுல்படுத்தப்படும்போது எதிர்வரும் காலப்பகுதியில் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிவரும் எனக் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக